hello madras mobile banner 1200x300

எழும்பூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக ஒருவரை கத்தியால் தாக்கிய வழக்கில் 2 நபர்கள் கைது.

சென்னை, எழும்பூர், டாக்டர் சந்தோஷ் நகர் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து
வரும் சந்துரு, வ/20, த/பெ.ஞானசேகர் என்பவர் எழும்பூர் ரயில்வே வாகனங்கள்
நிறுத்தும் இடத்தில், ஒப்பந்த அடிப்படையில் டிக்கெட் கொடுக்கும் வேலை செய்து
வருவதாகவும், இவர் தனது நண்பர்களுடன் வேளாங்கன்னி சென்றபோது,
நண்பர்களான ரோஷன் மற்றும் ஆகாஷ் ஆகிய இருவருக்குமிடையே பிரச்சனை
ஏற்பட்டபோது, சந்துரு, ரோஷன் என்பவருக்கு ஆதரவாக பேசியதாகவும், இதனால்,
சந்துருவிற்கும், ஆகாஷிற்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், கடந்த
10.09.2026 அன்று இரவு, சந்துரு எழும்பூர், ரயில்வே வாகனம் நிறுத்துமிடத்தில்
இருந்தபோது, அங்கு வந்த ஆகாஷ் மற்றும் அவரது 2 நண்பர்கள் சேர்ந்து,
முன்விரோதம் காரணமாக சந்துருவிடம், தகாத வார்த்தைகள் பேசி, கத்தியால்
தாக்கிவிட்டு, மூவரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதாகவும், தாக்குதலில்
இரத்த காயமடைந்த சந்துரு, கே.எம்.சி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை
பெற்று வரும் நிலையில், சந்துருவின் மனைவி கலைவாணி, பெ/வ.20 என்பவர்
மேற்படி சம்பவம் குறித்து, F-2 எழும்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த
புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் மேற்கொண்டனர்.
F-2 எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர்
தீவிர விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட எழும்பூர், சந்தோஷ்
நகரைச் சேர்ந்த எதிரிகள் 1.ஆகாஷ், வ/27, 2.ஜித் (எ) ஜித்தன், வ/21, ஆகிய 2
நபர்களை நேற்று (12.09.2026) கைது செய்தனர். அவர்களிடமிருந்து குற்ற செயலுக்கு
பயன்படுத்திய 1 கத்தி மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கைது செய்யப்பட்ட எதிரி ஆகாஷ் மீது ஏற்கனவே 1 அடிதடி
வழக்கும், எதிரி ஜித் (எ) ஜித்தன் மீது அடிதடி, வழிப்பறி உட்பட 3 குற்ற வழக்குகள்
உள்ளதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று
(12.09.2026) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில்
அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு தலைமறைவு எதிரியை பிடிக்க
காவல்குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »