hello madras mobile banner 1200x300

துரைப்பாக்கம் பகுதியில் 2 ஆண்கள் விடுதிகளில் லேப்டாப்களை திருடிய காவலாளி கைது. 3 லேப்டாப்கள் மீட்பு

சென்னை – 3 நவம்பர், 2026 புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், வ/28 என்பவர், சென்னை பெருங்குடி, சிபிஐ காலனியில் உள்ள ஆண்கள் விடுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை செய்து வருவதாகவும், இவர் கடந்த 26.06.2026 அன்று காலை மேற்படி விடுதி அறையை பூட்டிவிட்டு, சாவியை வழக்கம்போல கதவின் அருகிலுள்ள மறைவான இடத்தில் வைத்துவிட்டு வேலைக்கு சென்று பின்னர் மாலை விடுதிக்கு வந்து அறையை திறந்து பார்த்தபோது, அறையில் வைத்திருந்த அவரது லேப்டாப், டிராலி பேக் மற்றும் அவருடன் தங்கியிருந்த நபரின் லேப்டாப் திருடு போனதாகவும், இதே போல மற்றொரு வழக்கில் துரைப்பாக்கம், பார்ததசாரதி நகரிலுள்ள ஒரு ஆண்கள் விடுதியில் தங்கியிருந்த விஜய், வ/21 என்பவர் 31.10.2026 அன்று இரவு அவரது அறையை பூட்டாமல் தாழிட்டு உணவு சாப்பிடச் சென்று சிறிது நேரம் கழித்து அவரது அறைக்கு வந்து பார்த்தபோது, அவர் அறையில் வைத்திருந்த லேப்டாப் மற்றும் நண்பரின் செல்போன் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்ததாகவும், மேற்படி புகார்தாரர்கள் மணிகண்டன் மற்றும் விஜய் ஆகியோர் J-9 துரைப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகார்கள் மீது 2 வழக்குகள் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

J-9 துரைப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடங்களிலும் தீவிர விசாரணை செய்து, மேற்படி திருட்டில் ஈடுபட்ட எதிரி பிகாஸ் சேதி, வ/33, பாலேஸ்வரி, ஒடிசா மாநிலம் என்பவரை நேற்று (01.11.2026) கைது செய்தனர். அவரிடமிருந்து புகார்தாரர்களின் 3 லேப்டாப்கள் மீட்கப்பட்டது.

விசாரணையில் எதிரி பிகாஸ் சேதி, புகார்தாரர் விஜய் தங்கியிருந்த துரைப்பாக்கம், பார்த்தசாரதி நகரிலுள்ள ஆண்கள் விடுதியில் காவலாளியாக வேலை செய்து வருவது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட எதிரி பிகாஸ் சேதி விசாரணைக்குப் பின்னர் நேற்று (01.11.2026) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

***

Read the full e-paper

Translate »