hello madras mobile banner 1200x300

கொடுங்கையூர் பகுதியில் சாலையில் பட்டாசு வெடித்து, காயம் ஏற்படுத்தி, பெண்ணிடம் தகாத வார்த்தைகள் பேசிய சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

சென்னை – 3 நவம்பர், 2026 சென்னை, கொடுங்கையூர் பகுதியில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் 27 வயது பெண் ஒருவர், கடந்த 31.10.2026 அன்று மாலை, அவரது மகளுடன் இருசக்கர வாகனத்தில் கொடுங்கையூர், ஆர்.ஆர் நகர், மாதா கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு ஒரு நபர் பட்டாசு வெடித்து வீசியபோது, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மேற்படி பெண் மற்றும் அவரது குழந்தையின் மீது பட்டு, இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டதாகவும், இது குறித்து அப்பெண், மேற்படி நபரிடம் ‘‘எதற்காக இப்படி ரோட்டில் பட்டாசு வெடிக்கிறாய்?‘‘ என்று கேட்டபோது, அந்த நபர், தகாத வார்த்தைகள் பேசி, அப்பெண்ணை திட்டியதாகவும், பின்னர் அங்கு கூட்டம் கூடவே, மேற்படி நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும், எனவே ரோட்டில் பட்டாசு வெடித்து, காயம் ஏற்படுத்தி, தகாத வார்த்தைகள் பேசிய மேற்படி நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட 27 வயது பெண், P-6 கொடுங்கையூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் (TNPHW) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

P-6 கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட எதிரி சசிகுமார், வ/33, ஆர்.ஆர் நகர், கொடுங்கையூர், சென்னை என்பவரை நேற்று (01.11.2026) கைது செய்தனர்.

P-6 கொடுங்கையூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான எதிரி சசிகுமார் மீது ஏற்கனவே 1 கொலைமுயற்சி உட்பட 15 குற்ற வழக்குகள் உள்ளது.

கைது செய்யப்பட்ட எதிரி சசிகுமார் என்பவர் விசாரணைக்குப் பிறகு நேற்று (01.11.2026) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

******

Read the full e-paper

Translate »