சென்னை – 8 நவம்பர், 2026 குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
"புனிதமான தீபாவளி நன்னாள் அன்று, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ராவணனை வென்ற பிறகு பகவான் ஸ்ரீ ராமர் அயோத்திக்குத் திரும்பியதை அடுத்து, ஆனந்தக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. வரிசையாக ஏற்றப்பட்டிருந்த அழகிய விளக்குகளை பகவான் ஸ்ரீ ராமர் கண்டுகளித்தார். இதுவே தீபாவளியின் கலாச்சார, பக்தி முக்கியத்துவம் ஆகும். இது ராமராஜ்யத்தின் மங்களகரமான தொடக்கத்தையும் குறிக்கிறது.
தீபாவளி பண்டிகையானது, எதிர்மறைப் போக்குகளை, நற்குணங்கள் வெல்வதைக் குறிக்கிறது. இது துன்பங்களின் முடிவையும், மகிழ்ச்சியான, செழிப்பான வாழ்வின் தொடக்கத்தையும் உணர்த்துகிறது. இந்த நன்னாளில், மக்கள் மங்களகரமான தொடக்கத்திற்காகவும் நல்வாழ்விற்காகவும் பகவான் கணேசரையும், செழிப்புக்காக மகாலட்சுமி மாதாவையும் வழிபடுகின்றனர். அனைவரின் மகிழ்ச்சிக்காகவும் பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன.
நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, செழிப்பு கிடைக்க வாழ்த்துகிறேன். நாம் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, நல்லிணக்கத்துடன் வாழ்வோம். மேலும், இந்திய விழுமியங்களால் வழிநடத்தப்படும் நமது தேசபக்தி மிக்க இளைஞர்கள், வளர்ச்சியடைந்த பாரதத்தைக் கட்டமைப்பதில் ஆர்வத்துடன் பங்களிக்கட்டும்."
