hello madras mobile banner 1200x300

இ20 பெட்ரோலில் எத்தனாலின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவிலேயே உள்ளது: பரிசோதனையில் உறுதி

சென்னை – 8 நவம்பர், 2026 கர்நாடகாவில் சில பெட்ரோல் விற்பனை நிலையங்களில் விற்கப்படும் இ20 பெட்ரோலில் 26 முதல் 31 சதவீதம் வரை எத்தனால் கலந்திருப்பதாக வெளியான குற்றச்சாட்டுகளுக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் மறுப்பு தெரிவிதுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விநியோகிக்கும் பெட்ரோல் நிர்ணயிக்கப்பட்ட தரத்திலேயே இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்களும் விநியோகிக்கும் இ20 பெட்ரோல், இந்திய தர நிர்ணய அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டுள்ளது.

மத்திய அரசின் கண்காணிப்பில் 27 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 893 பெட்ரோல் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் அனைத்திலும் எத்தனால் அளவு 19 முதல் 21 சதவீதத்திற்குள் இருந்தது. கர்நாடகாவில் பரிசோதிக்கப்பட்ட 56 மாதிரிகளிலும் 19 முதல் 20 சதவீதம் மட்டுமே இருந்தது. சராசரி அளவு 19.30 சதவீதமாகும்.

கர்நாடகாவில் இதற்கு முன்பு, அக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எண்ணெய் நிறுவனப் பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை என்றும், முறையான மாதிரி சேகரிப்பு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும், பரிசோதனை அறிக்கைகளில் தேவையான தொழில்நுட்ப விவரங்கள் இல்லை என்றும் அவை சுட்டிக்காட்டியுள்ளன. எனவே, மாதிரிகளைச் சேகரித்து, அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் மீண்டும் பரிசோதிக்க வேண்டும் எனக் கோரியுள்ளன.

இ20 பெட்ரோலால் வாகனங்களின் மைலேஜ் 10 சதவீதம் குறையும் என்ற கணிப்பு அறிவியல் அடிப்படையற்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read the full e-paper

Translate »