சென்னை 29, அக்டோபர் 2026: மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, இன்று, அனநாயகத் தில் கருத்து வேறு பாடுகளும் பார்வைக் கோணங்களில் மாற் றங்களும் இருப்பது இயல்பானவை என்றும், ஆனால் அத்தகைய கருத்து வேறுபாடுகளை எப்போதும் பரஸ்பர மரியாதையுடனும் கண்ணியத்துடனும் வெளிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கருத்துகள் மாறுபடும் சூழலிலும், பேச்சில் கட்டுப்பாடு, அற ª நறி சார்ந்த நடத்தை, பிறருக்கு மரியாதை அளித்தல் ஆ கி ய வ ற் றி ன் முக்கியத் துவத்தை, சந்த் கபீரின் போத னைகள் எடுத்துரைப் பதாக அவர் குறிப் பிட்டார்.
உத்தரப் பிரதேசத் தின் லக்கிம்பூர் கெரியில் உள்ள கபீர் தாம் ஆசிரமத்தில் நடைபெற்ற 'சந்த் கபீர் பெருவிழா' மற்றும் 'கபீர் ஸ்மிருதி பவனின்' அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றிய திரு பிர்லா, கருணை, சமத்துவம், சமூக நல்லிணக்கம் குறித்த சந்த் கபீரின் காலத்தால் அழியாத போதனை கள், ஆறு நூற்றாண்டு களுக்குப் பிறகும் கூட இன்றும் சமூகத்திற்கு வழிகாட்டியாகத் திகழ்கின்றன என்று குறிப்பிட்டார். சந்த் கபீரின் போதனைகளை மேலும் பரவலாகக் கொண்டு செல்வது, மக்களிடையே உணர் திறன், பரஸ்பர புரிதல், சமூக நல்லிணக்கத்தை வளர்க்க உதவும் என்று அவர் தெரிவித்தார். சமூக சீர்திருத்தங் களுக்குச் சந்த் கபீர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பை நினைவு கூர்ந்த மக்களவைத் தலைவர், சாதி, மத வேறுபாடுகள், சமூகப் பாரபட்சங்களால் சமூகம் பிளவுபட் டிருந்த அக்காலகட்டத் தில், பழமைவாதக் கருத்துகளை சந்த் கபீர் எதிர்த்ததுடன், பிளவு களை உண்டாக்கும் தடைகளை உடைத் தெறியவும் பாடுபட் டார் என்று குறிப் பிட்டார்.
