சென்னை – 1 நவம்பர், 2026 திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், த.வெ.க. அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. மகளிர் அணி சார்பில் 31.10.2026 அன்று நடத்தப்படும் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் குறித்து தி.மு.கழகத்தினருக்கும், பொது மக்களுக்கும் காணொலி பதிவின் வாயிலாக அழைப்பு விடுத்திருந்தார்.
அதனை த.வெ.க.வின் அதிகாரபூர்வ தகவல் தொழில்நுட்ப அணியின் சமூக வளத்தளத்தில் கேலியும், கிண்டலும் செய்யும் வகையில் விஷமதனமான கருத்துக்களை பதிவேற்றம் செய்து தி.மு.க. தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் புகழுக்கும், பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் வெளியிட்டதை கண்டித்து தி.மு.கழகத்தின் சார்பில் இன்று (31.10.2026) சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அவர்களிடம் தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இ. பரந்தாமன் அவர்கள் புகார் மனு அளித்துள்ளார்.
