hello madras mobile banner 1200x300

அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்வு: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை – 1 நவம்பர், 2026 சென்னை: அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 60 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 63 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அவவித்துள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, மக்கள் நலனை அவர்கள் முன்னிறுத்தி பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து அவற்றைச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டங்களை வடிவமைப்பதிலும் அவற்றை திறம்பட நடைமுறைப்படுத்துவதிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு ஜூலை 1 2026 முதல் அகவிலைப்படி 60 சதவீதத்திலிருந்து 63சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில் முதல்வர் விஜய் இதனை கனிவுடன் பரிசீலித்து ஜூலை 1 2026 முதல் மாநில அரசு பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Read the full e-paper

Translate »