hello madras mobile banner 1200x300

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஹூக்கா பார்களில் சுகாதாரத் துறையினருடன் இணைந்து காவல்துறையினர் தீடீர் சோதனை– விதிமீறல்கள் தொடர்பாக நடவடிக்கை.

சென்னை – 7 நவம்பர், 2026 சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A.அமல்ராஜ் அவர்கள் உத்தரவின்பேரில், காவல் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில் நேற்று (05.11.2026), சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட தேனாம்பேட்டை, வேப்பேரி, நுங்கம்பாக்கம், எழும்பூர், அண்ணாசாலை, மயிலாப்பூர் மற்றும் இராயப்பேட்டை பகுதிகளில் செயல்பட்டு வந்த 14 ஹூக்கா பார் (Hookah Bar) மையங்களில், சென்னை பெருநகர காவல்துறையினர், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப்பொருட்களை ஏதாவது பயன்படுத்தபடுகிறதா என திடீர் சோதனைகள் மேற்கொண்டனர்.

இந்தச்சோதனையின்போது, ஹூக்கா பார் மையங்கள் உரிய அனுமதி பெற்று இயங்குகின்றதா, அரசின் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்தும், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் ஏதும் பயன்படுத்தப்படுகின்றதா என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

சோதனையின் போது விதிமீறல்கள் நடைபெற்று இருக்கலாம் என்று சந்தேகத்தின் அடிப்படையில் 13 ஹூக்கா பார் (Hookah Bar) மையங்களில், சம்பந்தப்பட்டவர்கள் மீது 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ஹூக்கா புகைக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை தடய அறிவியல் ஆய்வு கூடத்திற்கு அனுப்பப்படுகிறது.

பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்களின் உடல் நலத்தை பாதிக்கும் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. ஹூக்கா பார்களில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தினால் காவல் துறை, சுகாதார துறையினருடன் இணைந்து இது போன்ற தீடீர் சோதனைகள் மேற்கொண்டு சட்டவிரோதமாக செயல்படும் ஹூக்கா பார்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகிறது.

Read the full e-paper

Translate »