சென்னை – 13 நவம்பர், 2026 சென்னை, இந்தியா, நவம்பர் 05, 2026: இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், சென்னையில் உள்ள ஹயாத் ரீஜென்சியில் நவம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற கொழும்பு போர்ட் சிட்டி இன்வெஸ்டார் ஃபோரம், முதலீடு, தொழில்முனைவு மற்றும் எல்லை தாண்டிய வணிக கூட்டாண்மைகளுக்கான புதிய வாய்ப்புக்களை ஆராய்ந்தது. சென்னையில் உள்ள டெபுட்டி ஹை கமிஷன் ஆஃப் ஸ்ரீலங்கா, போர்ட் சிட்டி கொழும்பு (PCC) உடன் இணைந்து நடத்திய இந்த மன்றம், நெருக்கமான வணிக ஈடுபாடு இரு நாடுகளிலும் உள்ள வணிகங்களுக்கு எவ்வாறு வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதை ஆராய்கின்ற வகையில், ரியல் எஸ்டேட், நிதிச் சேவைகள், சரக்குப் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளைச் சேர்ந்த வணிகத் தலைவர்கள், முன்னணி இந்திய தொழில்துறை வர்த்தக சபைகளின் பிரதிநிதிகள், முதலீட்டாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை ஒன்றிணைத்தது.
அழைப்பின் பேரில் மட்டுமே நடத்தப்பட்ட இந்த மன்றம், இந்திய வணிக மற்றும் முதலீட்டு சமூகத்துடனான ஈடுபாட்டை ஆழப்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டையும், நீண்டகால இருதரப்பு பொருளாதார உறவுகளை உறுதியான வணிக வாய்ப்புகளாக மாற்றுவதையும் முக்கியப்படுத்துகின்ற வகையில், இந்தியாவில் போர்ட் சிட்டி கொழும்பு நடத்திய முதல் முதலீட்டாளர் மன்றமாக அமைந்தது.
இந்த நிகழ்ச்சி, தென்னிந்தியாவுக்கான இலங்கை துணை உயர் ஆணையர் மதிப்பிற்குரிய டாக்டர் கணேசநாதன் கீதீஸ்வரன்
அவர்களின் உரையுடன் தொடங்கியது. “இந்தியாவும் இலங்கையும் புவியியல், வரலாறு மற்றும் வணிகத்தால் பிணைக்கப்பட்டுள்ளன, அந்த உறவு எப்போதையும் விட இப்போது வலுவாக உள்ளது. அதிக வணிக ஈடுபாடு மற்றும் முதலீட்டின் மூலம் இந்த உறவுகளை ஆழப்படுத்துவதற்கு கணிசமான வாய்ப்புகள் உள்ளன. வலுவான தொழில்துறை அடித்தளம் மற்றும் தொழில்முனைவோர் சூழலமைப்பைக் கொண்ட சென்னை, இந்த உரையாடலுக்கான ஒரு முக்கியமான சந்தையாக இருக்கிறது. இந்த மன்றம் நம் இரு நாடுகளின் வணிகங்களுக்கிடையே நீடித்த கூட்டாண்மைகளை உருவாக்கவும், பகிரப்பட்ட வாய்ப்புகளை அர்த்தமுள்ள பொருளாதார விளைவுகளாக மாற்றவும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் கூறினார்.
இந்திய வணிகங்கள் தங்கள் உள்நாட்டு தளத்தை விட்டு வெளியேறாமல் தங்கள் திறன்களையும் சந்தை அணுகலையும் விரிவுபடுத்த உதவுகின்ற வகையில், இந்த மன்றத்தின் முக்கிய கருப்பொருள் “இந்தியாவின் வளர்ச்சிப் பயணம், மேலும் வலுப்படுத்தப்படுகிறது: ஏன் இலங்கை, ஏன் இப்போது?” என்பதாக இருந்தது. இலங்கை இந்தியாவுக்கு அருகாமையில் அமைந்திருத்தல், பகிரப்பட்ட நேர மண்டலம், கலாச்சார ஒற்றுமைகள் மற்றும் நிறுவப்பட்ட வணிக மற்றும் சட்ட நிறுவனங்கள் ஆகியவை பிராந்திய மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு சேவை செய்ய விரும்பும் வணிகங்களுக்கு நடைமுறை நன்மைகளை வழங்குகின்றன. ரியல் எஸ்டேட், தயாரிப்பு பொறியியல், கருவூலம், தரவு பகுப்பாய்வு, சைபர் பாதுகாப்பு மற்றும் வணிக செயல்முறை செயல்பாடுகள், அத்துடன் தரவு மையங்கள், தொழில்நுட்பம், AI மற்றும் பிற வளர்ந்து வரும் துறைகள் முழுவதும் உள்ள வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடல்கள் ஆராய்ந்தன. மேலும், முதலீட்டு வசதி மற்றும் முன்கூட்டியே அறியக்கூடிய ஒழுங்குமுறை சூழல் ஆகியவை, தங்கள் பிராந்திய விரிவாக்க மூலோபாயங்களின் ஒரு பகுதியாக இலங்கையை மதிப்பிடும் வணிகங்களுக்கு எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்பதையும் இந்த விவாதங்கள் ஆராய்ந்தன.
"முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, ஒரு முன்மொழிவின் வலிமை அது வழங்கும் வாய்ப்பில் மட்டுமல்ல, அவர்கள் இயங்கும் கட்டமைப்பின் உறுதியிலும் உள்ளது. ஒரு சட்டபூர்வமான கட்டமைப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட முதலீட்டாளர் பாதுகாப்புகள் மூலம் அந்த தெளிவை வழங்குவதற்காக போர்ட் சிட்டி கொழும்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. தங்கள் எல்லையை விரிவுபடுத்த விரும்பும் இந்திய வணிகங்களுக்கு, இலங்கை, நெருக்கமான, நன்கு அறிமுகமான இடமாக, பரந்த பிராந்திய வாய்ப்புகளுக்கான அணுகலை வழங்குகிறது. வளர்ச்சியின் மையம் இந்தியாவிலேயே இருப்பதுடன், இது வணிக திறன்களை விரிவுபடுத்துவது மற்றும் ஒரு நிரப்பு கூட்டாளராக புதிய சந்தைகளை அடைவது பற்றியது,," என்று கொழும்பு போர்ட் சிட்டி எக்கனாமிக் கமிஷன் இன் தலைவர் ஹர்ஷா அமரசேகர PC கூறினார். போர்ட் சிட்டி கொழும்பு ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகும், இது இலங்கை ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க அவர்களின் அலுவலகத்தின் நேரடி மேற்பார்வையில் இயங்குகிறது, அவர் நிதி அமைச்சராகவும் பொறுப்பு வகிப்பது, இத்திட்டத்தின் மீது இலங்கை அரசாங்கத்திற்கு இருக்கும் தீவிர ஆர்வத்தை உணர்த்துகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.
CHEC போர்ட் சிட்டி கொழும்பு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் துல்சி அலுவிஹாரே, ஒரு சர்வதேச வணிக மற்றும் முதலீட்டு இலக்காக போர்ட் சிட்டி கொழும்பு வின் முன்மொழிவை விவரித்து, இலங்கையின் ஒரே வெளிநாட்டு நாணயம்-நியமிக்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற அதன் நிலையை எடுத்துரைத்தார். ஒற்றைச் சாளர அனுமதி செயல்முறை, முதலீட்டாளர் பாதுகாப்புகள், நிலைப்படுத்தல் பொறிமுறை, சர்வதேச நடுவர் நீதிமன்ற விதிகள், 100% வெளிநாட்டு உரிமைத்துவம் மற்றும் இந்திய ரூபாய் உட்பட 16 வெளிநாட்டு நாணயங்களில் பரிவர்த்தனை செய்யும் திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த மண்டலத்திற்கு அடிப்படையாக அமையும் சட்ட கட்டமைப்பையும் அவர் விரிவாக விளக்கினார்.
டிவிஎஸ் வெஹிகிள் மொபிலிட்டி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், CII தென் பிராந்திய சர்வதேச வணிக மேம்பாட்டு பணிக்குழுவின் இணைத் தலைவருமான மது ரகுநாத்; JLL நிறுவனத்தின் இந்தியா மற்றும் இலங்கைக்கான மூத்த இயக்குநர் மற்றும் தலைவர் – சிறப்பு மையம், மூலோபாய ஆலோசனை மற்றும் மதிப்பு & இடர் ஆலோசனைப் பிரிவு, ராபின் S; அமரசேகர; மற்றும் CHEC போர்ட் சிட்டி கொழும்பு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் துல்சி அலுவிஹாரே ஆகியோர் துறைசார் வாய்ப்புகள், ஒழுங்குமுறை வசதிகள் மற்றும் வணிக கூட்டாண்மைகளுக்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாட ஒரு குழு விவாதத்தில் ஒன்று கூடினர்.
JLL நிறுவனத்தின் இந்தியா மற்றும் இலங்கை பிரிவின் மூத்த இயக்குநர், சிறப்பு மையத் தலைவர், மூலோபாய ஆலோசனை மற்றும் மதிப்பு மற்றும் அபாய ஆலோசனைப் பிரிவு ராபின் S. கூறும்பொழுது,“உள்நாட்டுச் சந்தைக்கு அப்பால் வாய்ப்புகளை ஆராயும் இந்திய வணிகங்களுக்கு, புவியியல் அண்மைத்தன்மை, வணிகம் செய்வதில் உள்ள எளிமை மற்றும் புதிய வளர்ச்சிச் சந்தைகளுக்கான அணுகல் ஆகியவை முக்கியமான பரிசீலனைகளாக இருக்கின்றன. ஒரு தெளிவான ஒழுங்குமுறை கட்டமைப்பும் வெளிப்படையான ஊக்கத் தொகுப்புக் கட்டமைப்பும் போர்ட் சிட்டி கொழும்புக்கு இந்தியாவிடமிருந்து தீவிர ஆர்வத்தைப் பெறுவதற்கான காரணிகளை வழங்குகின்றன, மேலும் இதுவரை நடைபெற்ற உரையாடல்கள் அந்த ஆர்வம் வளர்ந்து வருவதைக் காட்டுகின்றன.” என்றார்.
சென்னையில் நடைபெற்ற இந்த இன்வெஸ்டார் ஃபோரம், இந்திய வணிக மற்றும் முதலீட்டு சமூகத்துடனான தொடர்புகளை ஆழப்படுத்துவதற்கான போர்ட் சிட்டி கொழும்பு வின் முயற்சிகளில் ஒரு முக்கியமான படியாகும். இனிவரும் காலங்களில், எல்லை தாண்டிய கூட்டாண்மைகளின் சாத்தியக்கூறுகளை மேலும் விரிவுபடுத்தவும், முதலீடு மற்றும் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புக்களைத் திறக்கவும் தொடர்ச்சியான உரையாடல் மேற்கொள்ளப்படும்.
