சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கடந்த 06.10.2025 அன்று சென்னை
பெருநகர காவல், விபச்சார தடுப்பு பிரிவு ஆய்வாளர் அவர்களை தொடர்பு கொண்டு அளித்த
புகாரில் அன்றைய தினம் அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவர் தம் அலுவலகம் வந்து
Pendrive ஒன்றை கொடுத்ததாகவும், அந்த Pendriveவில் பிரபல தொழிலதிபர் வீரமணி தனது
கூட்டாளி சாந்தி என்பவரின் வீட்டில் உள்ள படுக்கையறையில் சிறுவயது சிறுமி ஒருவருடன்
பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது பதியப்பட்டுள்ளதாக கூறிச்சென்றுள்ளார். மேற்படி
Pendriveவில் பதிவாகியிருந்த வீடியோவை பார்த்த போது, வயதான ஒரு நபர் சிறுமி
ஒருவருடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்தப்புகாரின் அடிப்படையில் சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு,
விபச்சார தடுப்பு பிரிவில் 07.10.2025 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கின் புலன்
விசாரணையில் அந்த Pendriveவில் பதியப்பட்ட வீடியோவில் இருந்த நபர் பிரபல கிரனைட்
தொழிலதிபர் திரு.வீரமணி என்பது தெரியவந்தது. இவர் தேனாம்பேட்டையில் ஒரு
வீட்டை வாடகைக்கு எடுத்து அதை சக எதிரிகள் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர
சிம்கன் ஆகியோரிடம் நிர்வாக பொறுப்புகளை கொடுத்துள்ளார். அந்த வீட்டின் படுக்கை
அறையில் பல சிறுமிகளை வரவழைத்து பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது
கண்டுப்பிடிக்கப்பட்டது. அவ்வாறு ஒரு சிறுமியுடனான குற்றத்தின் வீடியோ ஆதாரம்
கைப்பற்றப்பட்டது.
மேற்கண்ட எதிரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களை சோதனையிட்ட போது,
இச்சம்பவம் தொடர்புடைய மற்றும் வேறு சில சிறுமிகள் மற்றும் பெண்களின் புகைப்படங்கள்
உள்ளிட்ட பல முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த குற்றங்களுக்கு
உதவியாகவும், குற்றங்களை மூடி மறைக்க உதவியும் செய்த சாந்தி மற்றும் அவரது கணவர்
மகேந்திர சிம்கன் மற்றும் முக்கிய குற்றவாளியான தொழிலதிபர் வீரமணி ஆகியோர் கைது
செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
இக்குற்ற சம்பவம் குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
