hello madras mobile banner 1200x300

சவுதி ஏர்போர்ட் மீது தாக்குதல் ஒருவர் உயிரிழப்பு; 8 பேர் காயம்; தூதரகத்தை காலி செய்யும் அமெரிக்கா..!!

சென்னை 23, அக்டோபர் 2026: சவுதி அரேபியாவின் கிழக்கே உள்ள தம்மாம் நகரில் கிங் பஹத் சர்வதேச விமான நிலையம் அமைந் துள்ளது. இதன் மீது நேற்று மாலை நடத்தப் பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப் பட்டார். 8 பேர் காய மடைந்தனர். இதை சவுதி சிவில் விமான போக்குவரத்து ஆணை யம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. ஆனால் ஈரான் ஆதரவு பெற்ற ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சமீப நா ட் களாக சவூதி விமான நிலையங்கள் மீது எரிபொருட்களை தொடர்ச்சியாக தாக்கி வருகின்றனர். பிராந்தி யத்தில் பதற்றம் அதிகரித்து வரும் வேளையில் இந்த தாக்குதல் நடை பெற்றுள்ளது.

ஏமனில் சவுதி ஆதரவு பெற்ற அரச படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் கடந்த செப்டம்பர் முதல் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளது. இதில் ஏமன் அரச ப ¬ ட க ளு க் கு ஆதரவாக செயல்படும் அண்டை நாடான சவுதி மீது ஹவுதிக்கள் குறிவைத்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே சவுதியின் ஷைபா எண்ணெய் வயல் மீதான தாக்குதலில் இந்தியர் ஒருவர் காயமடைந்த தாக சவுதியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது. அவரது உடல்நிலையை கண்கா ணித்து வருவதுடன், தேவையான உதவி களையும் உறுதிசெய்து வருகிறது. அங்கு பதற்றம் அதிகரித் துள்ளதால் அமெரிக்க தூதரக ஊழியர்களை யும் அவர்களது குடும் பத்தினரையும் நாட்டை விட்டு வெளியேறு மாறு உத்தரவிட் டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »