hello madras mobile banner 1200x300

சத் பூஜை விழாவில் மாலை நேரச் சூரிய வழிபாடு நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து

சென்னை – 16 நவம்பர், 2026 சத் பூஜை விழாவின் ஒரு பகுதியாக மாலை நேரத்தில் சூரியனுக்கு நீர்வார்த்து வழிபடும் சந்தியா அர்க்கியா நிகழ்வையொட்டி, நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (15.11.2026) தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இயற்கையை வழிபடுவதற்கான இந்தப் புனிதமான நிகழ்வு, அனைவரிடமும் புதிய விழிப்புணர்வையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தட்டும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

மேலும், இந்நிகழ்வு சமூகத்தில் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்தட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சூரியக் கடவுளின் அருளால் அனைவரின் வாழ்க்கையும் ஒளிமயமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக அவர் கூறியுள்ளார். சத்தி மையா தேவியையும் தாம் போற்றி வழிபடுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Read the full e-paper

Translate »