hello madras mobile banner 1200x300

கல்வி உதவித்தொகையால் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டும் உயர்கல்வியை தொடரும் இளைஞர்

சென்னை – 11 நவம்பர், 2026 மேற்கு வங்க மாநிலம், டார்ஜலிங் பகுதியை சேர்ந்தவர் சயான் ராய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 32 வயதான இவர், உயர்கல்வியில் சாதிக்க வேண்டும் என விரும்பம் கொண்டிருந்தார். முனைவர் பட்டப்படிப்பு பயிலும் இவர், ஆரம்ப கட்டத்தில் நிதிச்சுமையால் பெரிதும் சிரமப்பட்டார். தங்குமிடத்திற்கான வாடகை, புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வாங்குவதற்கான செலவுகளை சமாளிக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளானார். இந்நிலையில், பட்டியலின மாணவர்களுக்கான தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ், கல்வி உதவித்தொகை வழங்குமாறு விண்ணப்பித்திருந்தார். இதைத்தொடர்ந்து, 2022 நவம்பர் மாதம் முதல் கல்வி உதவித்தொகையை பெற்று வருகிறார். இதுவரை ரூ.18.41 லட்சம் உதவித்தொகை பெற்றுள்ள சயான் ராய், இதன்மூலம் கல்வி பயில்வதற்கான அனைத்து செலவுகளையும் சிரமின்றி செய்து வருகிறார். பட்டியலின மாணவர்களுக்கான தேசிய கல்வி உதவித்தொகை திட்டமானது, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டு உயர்கல்வியை தொடர வழிவகை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read the full e-paper

Translate »