hello madras mobile banner 1200x300

கூட்டுக் குடிநீர் கூட்டு குடிநீர் திட்டத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பொறியாளர்கள் ஆய்வு…

காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட முப்பத்தி ஆறு கிராம ஊராட்சிகள் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன அனுப்பானடி, சிந்தாமணி ஐராவதநல்லூர், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 5 ஆண்டுகளாக குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ள பகுதிகள் குடிநீர் விநியோகத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ஹரிபாஸ்கர், உதவி பொறியாளர் ஸ்டீபன் ரத்தினம் மற்றும் பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். மின்தடை குழாயில் பழுது ஏற்படும் நேரம் தவிர மற்ற நேரங்களில் குடிநீர் தடையின்றி வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொறியாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »