hello madras mobile banner 1200x300

காமன்வெல்த் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் இந்தியப் பிராந்திய மாநாடு – பெங்களூருவில் 17-ம் தேதி தொடங்கி வைக்கிறார் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

சென்னை – 16 நவம்பர், 2026 காமன்வெல்த் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் இந்தியப் பிராந்திய மாநாடு – பெங்களூருவில் 17-ம் தேதி தொடங்கி வைக்கிறார் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா.

காமன்வெல்த் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் இந்தியப் பிராந்திய மாநாட்டை, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, 2026 நவம்பர் 17-ல் பெங்களூரு சட்டமன்றத்தில் தொடங்கி வைக்கிறார். தொடக்க நிகழ்வில் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் முக்கிய உரையாற்றுகிறார். மாநிலத் துணை முதலமைச்சர் ஜி. பரமேஸ்வரா, மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ், கர்நாடக சட்டப்பேரவைத் தலைவர் ஜி.எஸ். பாட்டீல், காமன்வெல்த் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியப் பிராந்திய தலைவர் புரந்தேஸ்வரி ஆகியோர் இதில் பங்கேற்றுப் பேசுகின்றனர். கர்நாடக சட்ட மேலவைத் தலைவர் சலீம் அகமது வரவேற்புரை நிகழ்த்த, துணைத் தலைவர் உமாஸ்ரீ நன்றியுரை வழங்குகிறார். பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

‘வலுவான அடித்தளம், வலுவான குரல்கள்: அனைவரையும் உள்ளடக்கிய இணையவெளி, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினர்களுக்கான வழிகாட்டுதல்’ என்பது மாநாட்டின் கருப்பொருளாகும். நவம்பர் 17-ம் தேதி நடைபெறும் முதல் அமர்வு, பெண்கள் இணையத்தைப் பாதுகாப்பாகவும் திறமையாகவும் பயன்படுத்துவது குறித்து விவாதிக்கும். நவம்பர் 18-ம் தேதி நடைபெறும் இரண்டாவது அமர்வு, பெண் உறுப்பினர்களின் நாடாளுமன்ற/சட்டமன்றப் பணித்திறனை மேம்படுத்துதல், குறிப்பாகப் புதிய உறுப்பினர்களுக்கு வழிகாட்டுதல் வழங்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.

Read the full e-paper

Translate »