hello madras mobile banner 1200x300

ஒட்டன்சத்திரம் ஒன்றியம் இடையகோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது….

திண்டுக்கல் மாவட்டம்  ,  ஒட்டன்சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட இடையகோட்டை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில்  இ.கல்லுப்பட்டி கிராமத்தில் அடிப்படை தேவைகளை கோரிக்கையாக முன் நிறுத்தி தார்சாலை சீர்படுத்தி தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. மற்றும் இடையகோட்டை தெற்கு பகுதியில் கலையரங்கம், சமுதாயக்கூடம், கழிப்பறை வசதி  போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரும்படி பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது. 

இக்கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வி செல்லமுத்து, ஜென்ஸி செல்வராஜ்,  ஊராட்சி மன்றத் தலைவர் சரவணன், ஊராட்சி மன்ற துணை தலைவர் காளீஸ்வரி காளிமுத்து, ஊராட்சி செயலர் வெள்ளைச்சாமி மற்றும் ஊர் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்ட்பட்டோர் கலந்து கொண்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »