சென்னை – 10 நவம்பர், 2026 இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, 2025-26-ம் ஆண்டின் சிறந்த தூய்மைப் பணிக்கான விருதுகளை, புதுதில்லியில் உள்ள விஞ்யான் பவனில், 2026 நவம்பர் 11-ம் தேதி வழங்குகிறார். மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில், தூய்மைக்கான புதிய முன்னெடுப்பு: கைகோர்ப்போம் இணைந்து தூய்மைப்படுத்துவோம் என்ற கருப்பொருளில் நடைபெற்ற தூய்மைப்பணிக்கான கள ஆய்வு வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், இந்த விருது வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் முன்னிலையில் நடைபெறவுள்ள 10-வது பதிப்புக்கான விருது வழங்கும் விழாவில், தூய்மைப் பணியில் சிறந்து விளங்கியவர்களுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கி கௌரவிக் கிறார்.
