hello madras mobile banner 1200x300

இசைஞானி இளையராஜா இசையமைப்பில் அபராஜீத் பிலிம்ஸ் கணேஷ் ரகு தயாரிப்பில், அமீரின் உதவி இயக்குநர் இராம்.நா இயக்கும் புதிய படம்

சென்னை 21, அக்டோபர் 2026: அமெரிக்காவில் வசிக்கும் கணேஷ் ரகு, தனது அபராஜீத் பிலிம்ஸ் சார்பாக மிகுந்த பொருட்செல வில் பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா நடித்த ‘நந்தா’ படத்தை தயாரித்து மிக பிரம் மாண்டமான வெற்றி யின் மூலம் தமிழ் திரை யுலகில் தடம் பதித்தார். தொடர்ந்து, பாலாவின் உதவி இயக்குநர் அமீரை சூர்யா, திரிஷா நடித்த ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் செய்து, அப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து, அமீரின் உதவி இயக்கு நர் இராம்.நா இயக்கத் தில், புதிய படம் ஒன்றை மிகப் பிரம் மாண்டமான பொருட் செலவில் அபராஜீத் பிலிம்ஸ் பேனரில் கணேஷ் ரகு தற்போது தயாரிக்க உள்ளார். இப்படத்தின் படப் பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங் கிய நிலையில், தொடர்ந்து நவம்பர் மா தம் முதல் கோவை யில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

இப்படத்தின் தொடக்க விழா நிகழ் வில், சேரன் க்ளாப் இன் சொல்ல, சசிக்குமார் கேமரா ஆன் செய்ய, அமீர் க்ளாப் அடித்து, பாலா ஆக்ஷன் சொல்ல, முதல் காட்சியை இயக்குநர் பாலா படமாக்கினார்

இயக்குனர் ஷிகி சந்திரசேகர், நடிகர் சிவக்குமார், தயாரிப் பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, திருமதி பூர்ணிமா பாக்யராஜ மற்றும் இயக்குனர் கரு பழனி யப்பன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நந்தா-மௌனம் பேசியதே படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த நிலையில் முதன்முறை யாக இசைஞானி' இளையராஜா நெகிழ்ச் சியான கதைக்களமும், ஊக்கமளிக்கும் திரைக் கதையும் கொண்டு உருவாகும் இப்படத் திற்கு, இசையமைக் கிறார் என்பது குறிப் பிடத்தக்கது.

இன்னும் பெயரிடப் படாத இப்படத்திற்கு, வாஞ்சி முருகேசன் ஒளிப்பதிவு செய்ய, பரதன் வசனம் எழுத, பாலுமகேந்திரா கலை இயக்கத்தில், பூபதி வேதகிரி படத்தைத் தொகுக்க, மீரா ஆடை வடிவமைக்க, பாலு ஸ்டில்ஸ் எடுக்க, பழநி அமாவாசை உடைகள் வடிவமைக்க, ஒலிக் கலவையை ஹரிஷ் கவனிக்க, மக்கள் தொடர்பை நிகில் முருகன் கவனிக்க, கோபி பிரசன்னாவின் விளம்பர வடிவமைப் பில் உருவாகும் இத் திரைப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பை விஜயகுமார் ஆர்.எஸ், காசி வர்மன் கவனிக் கின்றனர். இப்படத்தில் நடிக்கும் முன்னணி நட்சத்திரங்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

அபராஜீத் பிலிம்ஸ் தமிழ் சினிமாவில் திறமையான இயக்குநர் கள் மற்றும் கலைஞர் களை அடையாளப் படுத்தி ஊக்குவித்து வரும் தனது திரைப் பயணத்தை இந்த திரைப்படத்தின் மூலம் தொடர்கிறது.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »