சென்னை, கொருக்குப்பேட்டை, ஹரிநாரயணபுரம், பகுதியில் மரகதம், பெ.வ/35,
க.பெ.ராஜி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், இவரது மகன் தீலிப்
என்பவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவருக்கும் ஏற்கனவே நிலம்
தொடர்பாக பிரச்சைன இருந்து வந்த நிலையில், கடந்த 17.09.2026 அன்று அதிகாலை,
வசந்தகுமார் அவரது சகோதரருடன் திலீப்பின் வீட்டிற்கு வந்து கதவை தட்டியபோது,
திலீப் வீட்டில் இல்லாதால், திலீப்பின் சகோதரி வெளியே சென்று பார்த்தபோது,
வசந்தகுமார் மற்றும் ஹரிகிருஷ்ணன், மேற்படி பெண்ணிடம் திலீப் எங்கே? எனக்கேட்டு
தகாத வார்த்தைகளால் பேசி, அப்பெண்ணை கையால் தாக்கி கீழே தள்ளிவிட்டபோது,
தாயார் மரகதம் வந்து தன் மகளை வீட்டினுள்ளே அழைத்துச் சென்று கதவை தாழிட்டுக்
கொண்டதாகவும், ஆத்திரத்தில் இருந்த இருவரும் ஆபாச வார்த்தைகளால் பேசி, கையில்
வைத்திருந்த மது பாட்டிலை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்து சென்றதாகவும்,
மேற்படி சம்பவத்தில் தனது மகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வசந்தகுமார்
மற்றும் அவரது சகோதரர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் மரகதம் என்பவர் H-6
ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், பாரதிய நியாய சன்ஹிதா
சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW
Act) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை
மேற்கொண்டனர்.
H-6 ஆர்.கே. நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர்
தீவிர விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட எதிரி வசந்தகுமார், வ/22,
இரயில்வே காலனி, CB ரோடு, கொருக்குப்பேட்டை, சென்னை என்பவரை நேற்று
(18.09.2026) கைது செய்தனர்.
H-6 ஆர்.கே.நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான எதிரி
வசந்தகுமார் மீது ஏற்கனவே கொலை முயற்சி உட்பட 8 குற்ற வழக்குகள் உள்ளது.
கைது செய்யப்பட்ட எதிரி வசந்தகுமார் விசாரணைக்குப் பின்னர் நேற்று
(18.09.2026) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில்
அடைக்கப்பட்டார்.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவு எதிரியை காவல் குழுவினர்
தேடி வருகின்றனர்.
