hello madras mobile banner 1200x300

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடினார்

தில்லி – 6 நவம்பர், 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்தியக் குழுவினரை புதுதில்லி இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். 140 கோடி இந்தியர்களின் சார்பாக விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், அவர்களின் குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், வழிகாட்டிகளின் முக்கிய பங்களிப்பைப் பாராட்டினார். இந்த விளையாட்டு வீரர்கள், ஒரு பிரம்மாண்டமான மேடையில் பதக்கங்களை வென்றது மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் இதயங்களையும் வென்றுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

Read the full e-paper

Translate »