hello madras mobile banner 1200x300

அரிசி விற்பனை இலக்கு 50 லட்சம் டன்னாக உயர்வு: இருப்பு விவரங்களை வாரந்தோறும் வெளியிட உத்தரவு

சென்னை – 7 நவம்பர், 2026 நாட்டில் அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், பதுக்கல், கள்ளச்சந்தை விற்பனையைத் தடுக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

அரிசி, நெல் இருப்பு விவரம் கட்டாயம்: நாடு முழுவதும் அரிசி, நெல் இருப்பு வைத்துள்ள வியாபாரிகள், மொத்த, சில்லறை விற்பனையாளர்கள், பெரிய வணிக நிறுவனங்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள் ஆகியோர் தங்களின் இருப்பு விவரங்களை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பாசுமதி, பிரீமியம் பாசுமதி அல்லாத அரிசி, சாதாரண அரிசி, புழுங்கல் அரிசி, உடைந்த அரிசி, நெல் என ஆறு வகைகளில் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். பதிவு செய்யாதவர்கள், இருப்பு வரம்பை மீறுபவர்கள் ஆகியோர் மீது அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் தேவைக்கேற்ப அரிசி, நெல் இருப்புக்கு உச்சவரம்பு விதிக்கலாம். இந்த உத்தரவு 2027 ஜனவரி 31 வரை அமலில் இருக்கும்.

Read the full e-paper

Translate »