CHENNAI 17 செப்டம்பர் 2026: இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக வாகனங்கள் உற்பத்தியாளரான Tata
Motors, தனது வர்த்தக வாகனங்களின் விலையை 1 சதவீதம் வரை உயர்த்துவதாக இன்று அறிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு 2026 அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது.
கமாடிட்டி மற்றும் பிற உற்பத்திச் செலவுகளின் உயர்வைச் சரிசெய்வதற்காக இந்த விலை திருத்தம்
மேற்கொள்ளப்படுகிறது. இந்த விலை உயர்வு மாடல் மற்றும் வேரியண்ட்டைப் பொறுத்து மாறுபடும்.
