hello madras mobile banner 1200x300

தேனாம்பேட்டை பகுதியில் விவாகரத்து ஆன பெண்ணை திருமணம் செய்து தாக்கிய கணவர் கைது.

சென்னை, தேனாம்பேட்டை, தாமஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண்,
அவரது கணருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு 2026ம் ஆண்டு நீதிமன்றத்தில்
விவாகரத்து பெற்று வசித்து வந்ததாகவும், 2வது திருமணத்திற்காக வீட்டில் வரன்
பார்த்துக் கொண்டிருந்தபோது, புரோக்கர் மூலம் கொடைக்கானல், பூம்பாறையைச்
சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் அறிமுகமாகி திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி
வந்ததால், மேற்படி பெண் வீட்டிலும் சம்மதம் தெரிவித்து, சமீபத்தில் வடபழனி கோயிலில்
மேற்படி பெண்ணுக்கும் பன்னீர் செல்வத்துக்கும் திருமணம் நடைபெற்றதாகவும், மேற்படி
பெண் இத்திருமணத்தை பதிவு செய்ய்ய வேண்டும் என கணவரிடம் கேட்டதற்கும்,
அவரது வீட்டிற்கு அழைத்து செல்ல கேட்டதற்கும் காலம் தாழ்த்தி வந்த நிலையில், கடந்த
26.08.2026 அன்று மாலை அப்பெண் மீண்டும் திருமணத்தை பதிவு செய்யுமாறு
கேட்டபோது, பன்னீர்செல்வம் தகாத வார்த்தைகளால் பேசி, ஸ்டீல் தண்ணீர் பாட்டில்
மற்றும் தரைதுடைக்கும் ஸ்டீல் மாப்பால் அப்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்
விடுத்து சென்றதாகவும், தாக்குதலில் காயமடைந்த அப்பெண் அவரது தாயார்
உதவியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர், தன்னை தாக்கிய கணவர்
பன்னீர்செல்வம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி E-3 தேனாம்பேட்டை காவல்
நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act)
மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) உள்ளிட்ட
பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
E-3 தேனாம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர்
சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட
பன்னீர்செல்வம், வ/41, பூம்பாறை, கொடைக்கானல், திண்டுக்கல் மாவட்டம் என்பவரை
நேற்று (29.08.2026) அன்று கைது செய்தனர்.
விசாரணையில் எதிரி பன்னீர்செல்வம் கார்பெண்டர் வேலை செய்து வருவது
தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட எதிரி பன்னீர்செல்வம் விசாரணைக்குப் பின்னர் நேற்று
(29.08.2026) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில்
அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »