hello madras mobile banner 1200x300

திருமங்கலம் தாலுகா இராயபாளையம் கிராமத்தில் இலவச பொது மருத்துவ முகாம்

மதுரை  – மதுரை மாவட்டம்திருமங்கலம் தாலுகா இராயபாளையம் கிராமத்தில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ராயபாளையம் ஊராட்சி மன்றம் சார்பாக ராயபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதர் தலைமையில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்மருத்துவ முகாமில் ராயபாளையம் கிராம பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனைகளை செய்து கொண்டனர். மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டபொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் சுப்புலட்சுமி செயலாளர் கௌசல்யா தன்னார்வலர் நாகேஸ்வரி மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »