சென்னை 27, அக்டோபர் 2026: தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு, பெண் கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு, போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட வற்றைக் கண்டித்து, திமுக மகளிர் அணி சார்பில் வரும் 31ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங் களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக திமுக தரப் பில் குற்றம் சாட்டப் பட்டுள்ளது. இதனால் மா நில த்தில் சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்பட் டுள்ளதாகவும், குறிப் பாகப் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் குழந்தைகள் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறு வது கவலை அளிப்ப தாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தைப் பாது காப்பான மாநிலமாக மாற்ற வேண்டும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் திமுக தொடர்ந்து வலி யுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதி ரான குற்றச் சம்பவங் களில் ஆளும் கட்சி யைச் சேர்ந்த நிர்வாகி கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி வருவதாக திமுக தரப்பில் குற்றம்சாட் டப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாது காப்பை உறுதிப்படுத்த அரசு உரிய நடவடிக் கைகளை எடுக்க வேண் டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கை களை முன்வைத்தும், சட்டம் – ஒழுங்கு சீர்கேடு மற்றும் பெண் கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்ப வங்களைக் கண்டித்தும், தமிழகத்தைப் பாது காப்பான மாநிலமாக மாற்ற வலியுறுத்தியும் வரும் 31ஆம் தேதி மாவட்டத் தலைநகரங் களில் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணியினர் மற்றும் கட்சியினர் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட் டுள்ளது.
