hello madras mobile banner 1200x300

கேரள அரசு தேர்வாணையத்தை கலைக்க ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்த முன்னாள் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர்: பினராயி விஜயன் கடும் கண்டனம்

சென்னை 27, அக்டோபர் 2026: கேரளத்தில் பினராயி விஜயன் யூலைமையி லான கடந்த இடதுசாரி கூட்டணி ஆட்சியில் அரசு தேர்வாணையத் தில் பல்வேறு நியமன முறைகேடுகள் நடந்த தாக புகார் கூறப்பட் டது. இது தொடர்பாக கேரள லஞ்ச சூழிப்புத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு மாறுத லாகி சென்ற கேரள முன்னாள் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர், கேரள அரசு தேர்வாணையத் தை கலைக்க வேண்டும் என்று கூறி ஜனாதி பதிக்கு சிபாரிசு செய்த தகவல் தற்போது வெளி யாகியுள்ளது.

மாறுதலாகி செல் வதற்கு ஒரு வாரத்திற்கு முன் ஆளுநர் ஜனாதி பதிக்கு இது தொடர் பாக கடிதம் அனுப்பி யுள்ளார். முன்னாள் ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு கேரள எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித் து ள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பது: இந்திய அரசிய லமைப்புச் சட்டத்தின் 316வது பிரிவின்படி அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப் பினர்கள் நியமிக்கப்படு கின்றனர். அவர்களுக்கு 6 ஆண்டுகள் பதவிக் காலம் நிர்ணயிக்கப்பட் டுள்ளது. இந்தக் காலத் துக்கு முன்னதாக உறுப் பினர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டு மானால், அரசிய லமைப்புச் சட்டத்தின் 317வது பிரிவில் குறிப் பிடப்பட்டுள்ள நடை முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

அதன்படி சம்பந்தப் பட்ட உறுப்பினர் மீதான புகார் குறித்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி, அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கான பரிந்துரையை அளிக்க வேண்டும். அதன் பின்னரே ஜனாதிபதி இதுதொடர்பாக முடி வெடுக்க முடியும். ஆனால் கேரள அரசுப் பணியாளர் தேர்வா ணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு எதிராக உச்சநீதிமன் றத்தில் இதுபோன்ற விசாரணை எதுவும் நடைபெறவில்லை. அப்படியிருக்கும் போது அவர்களை பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி க்கு பரிந்துரை செய்ய ஆளுநருக்கு அரசிய லமைப்புச் சட்டப்படி அதிகாரம் கிடையாது.

பதவியில் இருந்து விலகுவதற்கு முன்பாக ஆளுநர் மேற்கொண் டுள்ள இந்த நடவடிக் கை ஏற்கெனவே அவர் மேற்கொண்டதாகக் கூறப்படும் சட்ட விரோத தலையீடுகளின் தொடர்ச்சியாகவே உள்ளது. அமைச்சரவை யின் ஆலோசனை களுக்கு ஏற்பவே ஆளுநர் செயல்பட வேண்டும். இந்த விவகாரத்தில் அவருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது. எனவே ஆளுநரின் இந்த நட வடிக்கையை மாநில அரசு ஆதரிக்கிறதா என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

அரசியலமைப்புக்கு முரணான ஆளுநரின் நடவடிக்கைகளை ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு ஆதரிக் கிறதா என்பதையும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தன் னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு ஆளும் காங்கிரஸ் கட்சியிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசிடம் தெரிவிக்கா மல் கேரள அரசு தேர்வாணையத்தை கலைக்க ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்த முன்னாள் ஆளுநரின் நடவடிக்கை ஏற்கத்தக்க தல்ல என்று கேரள வருவாய்த்துறை அமைச்சர் அனில்குமார் கூறியுள்ளார்.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »