hello madras mobile banner 1200x300

ஒடிசா மாநிலம் ஜட்னியில் ரூ.170 கோடி செலவில் ரிசர்வ் வங்கியின் தரவு மையம், சைபர் பாதுகாப்பு பயிற்சி நிறுவனம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் ‘‘வங்கித் துறையை சைபர் பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுகாப்பது அவசியம்’’ என்று அறிவுறுத்தல்

சென்னை 27, அக்டோபர் 2026: ஒடிஷா மாநிலம் புவனேஸ்வர் அருகே ஜட்னியில், ரிசர்வ் வங்கியின் தரவு மையம் மற்றும் சைபர் பாதுகாப்பு பயிற்சி நிறுவனத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். வங்கித் துறையை சைபர் பயங்கரவாதி களிடம் இருந்து பாது காப்பது அவசியம் என்று பிரதமர் கூறி னார். ஒடிசா மாநிலம் ஜட்னி ‘இன்போ வேலி-2’ பகுதியில் ரூ.170 கோடி செல வில் ரிசர்வ் வங்கியின் தரவு மையம் மற்றும் சைபர் பாதுகாப்பு பயிற்சி நிறுவனம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. தரவு மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: ரிசர்வ் வங்கியின் இந்த தரவு மையம், ஒடிசா மக்களுக்கும், நாட்டுக்கும் பெரிதும் பயனளிக்கும். இத் தி ட் ட த் து ட ன் தொடர்புடைய அனைவருக்கும் பாராட்டுக்கள்.

இன்றைய காலத்தில் போர்கள் ஆயுதங் களால் மட்டுமே நடத்தப்படுவதில்லை என்பது நமக்கு தெரியும். ஒரு நாட்டை பலவீனப்படுத்த அதன் பொருளாதாரத்தின் மீது தாக்குதல் நடத்தப் படலாம். இந்தியா பொருளாதார ரீதியாக வலுவடைந்து வரும் சூழலில், நமது வங்கி அமைப்பை சைபர் கொள்ளையர்கள் மற்றும் சைபர் பயங்கர வாதிகளிடமிருந்து பாதுகாப்பது மிக அவசியமாகும். பழைய அமைப்புகள், பயிற்சி முறைகள் மற்றும் கருவிகளைக் கொண்டு இத்தகைய புதிய சவால்களை எதிர் கொள்ள முடியாது. இந்த புதிய சவால்களை எதிர்கொள்ள நாட் டிற்கு நவீன உள்கட் டமைப்பும், திறமை யான மனித வளமும் தேவை. இதில் ரிசர்வ் வங்கியின் தரவு மையம் மற்றும் சைபர் பாது காப்பு பயிற்சி நிறுவனம் போன்ற அமைப்பு களின் பங்கு முக்கிய மானது. காங்கிரஸ் ஆட்சியில் ஏழை களுக்கு வங்கிச் சேவை கள் கிடைக்கவில்லை. அப்போது பணக்காரர் களுக்கு ஆயிரக்கணக் கான கோடி ரூபாய் கடன்கள் எளிதில் கிடைத்ததால் வாராக் கடன் அதிக ரித்து வங்கித் துறை நெருக் கடியில் சிக்கி வந்தன. 2014 ம் ஆண்டுக்குப் பிறகு வங்கிச் சேவைகள் விரிவடைந்துள்ளன. சுமார் 60 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப் பட்டுள்ளன. சிறு தொழில்முனைவோர், கைவினைஞர்கள், தெரு வோர வியாபாரி கள், அமைப்புசாரா தொழி லாளர்கள் உள்ளிட் டோர் வங்கிச் சேவை களால் பயனடைந் துள்ளனர். கடந்த பத் தாண்டுகளில் வங்கிச் சேவைகள் கிடைக்காத வர்களுக் கும் அவை கொண்டு செல்லப் பட்டன. அடுத்த பத் தாண்டுகளில் வங்கிச் சேவைகளை மேலும் திறமையானதாகவும், நம்பகமானதாகவும் மாற்று வது இலக்கு. இவ்வாறு அவர் பேசி னார். ரூ.170 கோடி மையம் கிட்டத் தட்ட 170 கோடி ரூபாய் செலவில் அமைக்கப் பட்டுள்ள ரிசர்வ் வங்கி யின் இந்த தரவு மையம், முக்கிய நிதி தரவுகளின் பாதுகாப் பை வலுப்படுத்துவ துடன், இந்தியாவின் டிஜிட்டல் நிதி கட் டமைப்பின் நம்பகத் தன்மையையு ம் , மீள் திறனையும் மேம்படுத் தும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதனுடன் அமைக்கப்பட்டுள்ள சைபர் பாதுகாப்பு பயிற்சி நிறுவனம், இணைய பாதுகாப்பு, நிறுவன கணினி தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் சிறப்பு பயிற்சிகளை வழங்குவதுடன், ஆராய்ச்சியையும் ஊக்குவிக்கும்.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »