hello madras mobile banner 1200x300

இந்தியாவில் புதிய ஆடி க்யூ3 அறிமுகம்: தொடக்க விலை ரூ.51.99 லட்சம்

மதுரை 18, அக்டோபர் 2026: ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவன மான ஆடி, தனது புதிய க்யூ3 (ஆடி க்யூ3) காரை இந்தியா வில் அறிமுகப்படுத்தி யுள்ளது. இக்காரின் அறிமுக விலை ரூ.51, 99,000 (காட்சியக விலையைத் தவிர). ம க £ ர £ ஷ் டி ர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள எஸ்ஏவிடபிள்யூஐபிஎ ல் ஆலையில் இந்தியா விலேயே தயாரிக்கப் படும் இந்தச் சிறிய ரக சொகுசுக் கார், சிறந்த செயல்திறன், மேம்பட்ட தொழில் நுட்பம் மற்றும் கூடுதல் வசதிகளை ஒருங்கே கொண் டுள்ளது.

புதிய ஆடி க்யூ3 கார் 150 கிலோவாட் திறனை வழங்குவ துடன், நான்கு சக்கரங் களுக்கும் ஒரே நேரத்தில் ஆற்றலைப் பகிர்ந்தளிக்கும் குவாட் ரோ இயக்கத் தொழில் நுட்பத்தையும் கொண் டுள்ளது. இதன் உட் புறத்தில் அகலமான மின்னணுத் திரை அ மைப்பு, ஓட்டுநரின் பார்வைக்கு நேரடி யாகத் தகவல்களைக் காட்டும் தலைக்கு முன்னால் அமைந்த காட்சித்திரை மற்றும் சோனோஸ் உயர்தர ஒலியமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்தக் காரில் நுண் எல்இடி தொழில்நுட் பத்துடன் கூடிய டிஜிட்டல் மேட்ரிக்ஸ் எல்இடி முகப்பு விளக்கு கள், நான்கு வகைகளில் தேர்வு செய்யக்கூடிய பகல்நேர ஓட்ட விளக்குகள் மற்றும் மூன்று விதமான மாறும் ஒளி அமைப்புகள் உள்ளன. பின்புறத்தில் ஒளிரும் ஆடி சின்னங் கள் தனித்துவமான தோற்றத்தை அளிக் கின்றன.

ஓ ட் டு ந ¬ ர மையமாகக் கொண்ட மின்னணு இடைமுகம், வாகனத் தகவல்கள், கட்டுப்பாடுகள் மற்றும் பொழுதுபோக்கு வசதி களை ஒருங்கிணைக் கிறது. கியர் மாற்றம், விளக்குகள், கண் ணாடித் துடைப்பான் கள் உள்ளிட்டவற்றை எளிதாகக் கட்டுப் படுத்தும் புதிய சுவிட்ச் அமைப்பும் இதில் இடம்பெற்றுள்ளது.

அறிமுகம் குறித்து ஆடி ஏஜி நிறுவனத்தின் ª வ ளி ந £ ட் டு விற்பனைப் பிரிவின் மூத்த இயக்குநர் விக்டோரியா காஃப் மேன்-ரீகர் கூறுகையில், இந்தியாவில் வளர்ந்து வரும் சொகுசுக் கார் சந்தையும், வாடிக்கை யாளர்களின் அதிகரித்து வரும் எதிர்பார்ப்பு களும் இந்நாட்டின் முக்கியத்துவத்தை உயர்த்துவதாகத் தெரிவித்தார்.

எஸ்ஏவிடபிள்யூஐபி எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பியூஷ் அரோரா, இந்தியாவில் இந்தக் கார் தயாரிக் கப்படுவது நாட்டின் உற்பத்தி மற்றும் பொறி யியல் திறன்களை எடுத்துக்காட்டுவதாகக் குறிப்பிட்டார்.

ஆடி இந்தியாவின் பிராண்ட் இயக்குநர் பல்பீர் சிங் தில்லான் கூறுகையில், புதிய க்யூ3 கார் செயல்திறன், அன்றாடப் பயன்பாட் டுக்கான வசதி, நவீனத் தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட சொகுசு அம்சங்களை ஒருங் கிணைப்பதாகத் தெரி வித்தார்.

நவீன வடிவமைப்பு, மேம்பட்ட மின்னணுத் தொழில்நுட்பம் மற்றும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் சிறப்பு ஆகியவற்றின் மூலம், இந்திய சொகுசுக் கார் வாடிக் கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதில் ஆடி நிறுவனம் தனது உறுதிப் பாட்டை வெளிப் படுத்தியுள்ளது.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »