தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரன்பட்டினம் அருள் தரும்
முத்தாரம்மன் திருக்கோவிலில் தசரா திருவிழா நடைபெறுவதையொட்டி மேற்கொள்ள
வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று (24.09.2026) மாவட்ட ஆட்சியர்
விஷு மகாஜன், ஆய்வு மேற்கொண்டார்.
குலசேகரன்பட்டினம் அருள் தரும் முத்தாரம்மன் திருக்கோவிலில் தசரா திருவிழா
நடைபெறுவதையொட்டி காமராஜர் நகரில் தற்காலிக பேருந்து அமையவுள்ள இடங்கள்,
கருங்காளியம்மன் கோவில் சந்திப்பு, குலசை – உடன்குடி செல்லும் சாலை பகுதியில் வாகனம்
நிறுத்துமிடம் போன்ற பணிகளையும், தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை மூலம் நல்லூர்
பகுதியில் இரயில்வே மேம்பாலம் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர்
விஷு மகாஜன், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கௌதம், இந்து சமய
அறநிலைத்துறை இணை ஆணையர் ரோஜாலிசுமதா, நெடுஞ்சாலைத்துறை
கோட்டப்பொறியாளர் லதா, திருச்செந்தூர் வட்டாட்சியர் தங்கசாமி மற்றும் அரசு
துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
