சென்னை, மடிப்பாக்கம், ஐயப்பன் நகர் 5வது தெருவில் வசித்து வரும்
சுப்பிரமணியன், வ/79 என்பவர் கால்நடை மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக
பணிபுரிந்து ஓய்வு பெற்றதாகவும், இவரது மனைவி நிர்மலா, பெ/வ.77 என்பவருக்கு
உடல்நிலை சரியில்லாததால், அவரை கவனித்துக் கொள்ள தனியார் நர்சிங் ஹோம்
கேர் மூலம் சித்ரா என்பவரை 2 மாதத்திற்கு முன்பு Care Taker ஆக நியமித்து அவரது
வீட்டிலேயே தங்கி சித்ரா வேலை செய்து வந்ததாகவும், 17.09.2026 அன்று காலை
சுப்பிரமணியன் அவரது மனைவியின் அறைக்கு சென்று பார்த்தபோது, அவர்
கழுத்தில் அணிந்திருந்த சுமார் 10.5 சவரன் தங்கச்சங்கிலி மற்றும் செல்போனை
காணாமல், சித்ராவும் அங்கு இல்லாததால், மேற்படி பொருட்களை சித்ரா திருடிச்
சென்றிருக்கலாம் என்பதால், சித்ராவை கண்டுபிடித்து தங்கச்சங்கிலி மற்றும்
செல்போனை மீட்டு தரும்படியும், சுப்பிரமணியன் என்பவர் S-7 மடிப்பாக்கம் காவல்
நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து
விசாரணை மேற்கொண்டனர்.
S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான
காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து, மேற்படி திருட்டில்
ஈடுபட்ட எதிரி சித்ரா, பெ/வ.44, க/பெ.செல்வராஜ், உடையார்பாளையம், அரியலூர்
மாவட்டம் என்பவரை நேற்று (18.09.2026) விசாரணை செய்தனர். அவரிடமிருந்து
புகார்தாரர் வீட்டிலிருந்து திருடிய சுமார் 10.5 சவரன் தங்கச்சங்கிலி மற்றும்
செல்போன் மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட எதிரி சித்ரா விசாரணைக்குப் பின்னர் நேற்று (18.09.2026)
நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில்
அடைக்கப்பட்டார்.
