hello madras mobile banner 1200x300

கொருக்குப்பேட்டை பகுதியில் வீண் தகராறு செய்து கட்டையால் தாக்கியவழக்கில் ஒருவர் கைது. 2 இளஞ்சிறார்கள் சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்.

சென்னை, கொருக்குப்பேட்டை, ஆரணி ரங்கன் தெருவில் வசித்து வரும்
கிருஷ்ணமூர்த்தி, வ/48 என்பவர் கடந்த 16.09.2026 அன்று இரவு கடைக்கு
சென்றுவிட்டு, வீட்டிற்கு செல்ல ஆரணி ரங்கன் தெருவில் நடந்து சென்று
கொண்டிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது இளைஞர் கடையில் பீடி
வாங்குவதை கண்டு அவரிடம் ‘ஏன் இந்த வயதில் பீடி குடிக்கற?‘ என கேட்டபோது,
அந்த இளைஞர் தகாத வார்த்தைகள் பேசி அருகிலிருந்த அவரது 2 நண்பர்களை
வரவழைத்து, 3 நபர்களும் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியை, கையால் தாக்கி பின்னர்
அருகிலிருந்த கட்டையை எடுத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாகவும்,
தாக்குதலில் 2 பற்கள் உடைந்து இரத்தக்காயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி ஸ்டான்லி
அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருவதாகவும்,
மேற்படி சம்பவம் குறித்து தன்னை தாக்கிய இளைஞர்கள் மீது நடவடிக்கை
எடுக்கும்படி மருத்துவமனையிலிருந்து கிருஷ்ணமூர்த்தி என்பவர் கொடுத்த புகார்
மீது H-4 கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து,
போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
H-4 கொருக்குப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்
குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில்
ஈடுபட்ட பிரவீன்குமார் (எ) குள்ளா, வ/20, ஆரணி ரங்கன் தெரு,
கொருக்குப்பேட்டை, சென்னை என்பவரை நேற்று (17.09.2026) கைது செய்தனர்.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 17 வயதுடைய
2 இளஞ்சிறார்களிடம் விசாரணை செய்தனர்.
கைது செய்யப்பட்ட எதிரி பிரவீன்குமார் விசாரணைக்குப் பின்னர் நேற்று
(17.09.2026) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில்
அடைக்கப்பட்டார். 2 இளஞ்சிறார்களும், சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்
செய்யப்பட்டு, அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »