hello madras mobile banner 1200x300

திருவொற்றியூர் பகுதியில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று கட்டையால் தாக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளி கைது.

சென்னை, திருவொற்றியூர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் 26 வயது
பெண் ஒருவர் கடந்த 12.09.2026 அன்று இரவு அவரது வீட்டில் தூங்கி
கொண்டிருந்தபோது, திடீரென சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது, தெரிந்த நபரான
சிலம்பரசன் என்பவர் வீட்டின் சமையலறையில் இருந்ததை கண்டு சத்தம் போடவே,
வீட்டிலிருந்த நபர்கள் எழுந்து பிடிக்க முயன்றபோது, சிலம்பரசன் தப்பிச் சென்றதாகவும்,
பின்னர் நேற்று (16.09.2026) அதிகாலை, அப்பெண் வீட்டிற்குள் தூங்கிக்
கொண்டிருந்தபோது, யாரோ உடலை தொடுவது போல உணர்ந்து சுதாரித்து எழுந்து
பார்த்தபோது, அதே சிலம்பரசன் என்பவர், யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள் அத்துமீறி
நுழைந்து, அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றது அறிந்து சத்தம் போடவே,
சிலம்பரசன் அப்பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி, அருகிலிருந்த கட்டையால்
அப்பெண்ணை தாக்கியபோது, வீட்டிலிருந்த பெற்றோர் மற்றும் அருகில் வசிப்பவர்கள்
பிடிக்க வருவதைக் கண்ட சிலம்பரசன் கையில் வைத்திருந்த கட்டையை காண்பித்து
மிரட்டி தப்பி ஓடிவிட்டதாகவும், மேற்படி சம்பவத்தில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து
தவறாக நடக்க முயன்று, கட்டையால் தாக்கிய சிலம்பரசன் மீது உரிய நடவடிக்கை
எடுக்கும்படியும், பாதிக்கப்பட்ட அப்பெண் H-8 திருவொற்றியூர் காவல் நிலையத்தில்,
கொடுத்த புகார் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்
வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார்
விசாரணை மேற்கொண்டனர்.
H-8 திருவொற்றியூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர்
தீவிர விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட எதிரி சிலம்பரசன், வ/26,
பட்டினத்தார் கோவில் தெரு, திருவொற்றியூர், சென்னை என்பவரை நேற்று
(16.09.2026) கைது செய்தனர்.
H-8 திருவொற்றியூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான எதிரி
சிலம்பரசன், மீது ஏற்கனவே ஒரு கொலை முயற்சி, 7 திருட்டு வழக்குகள், வழிப்பறி
உட்பட சுமார் 12 குற்ற வழக்குகள் உள்ளது.
கைது செய்யப்பட்ட எதிரி சிலம்பரசன் என்பவர் விசாரணைக்குப் பின்னர் நேற்று
(16.09.2026) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில்
அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »