சென்னை – 5 நவம்பர், 2026 சென்னை 04 நவம்பர் 2026: ICICI லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், தனது பெரும்பாலான யூனிட்-லிங்க்ட் இன்சூரன்ஸ் திட்டங்களுடன் (ULIPs) கிடைக்கும் புதிய ஈக்விட்டி முதலீட்டு விருப்பமான ஐசிஐசிஐ லைஃப் BSE 500 Momentum குவாலிட்டி 50 இன்டெக்ஸ் ஃபண்ட் -ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிதி, முதலீட்டாளர்களுக்கு வலுவான நிதி நிலைமை மற்றும் நேர்மறையான பங்கு விலை போக்கைக் கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
இந்த இண்டெக்ஸ் ஃபண்ட், மொமண்டம் (Momentum) மற்றும் குவாலிட்டி (Quality) ஆகிய இரு காரணி சேர்க்கைகளில் சிறப்பாகச் செயல்படும் BSE 500 பட்டியலில் உள்ள 50 பங்குகளின் பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்வதன் மூலம், முதலீட்டாளர்கள் சிறந்த நீண்டகால வருவாயைப் பெற உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிமுகம் குறித்து ஐசிஐசிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி (Chief Investment Officer) மணீஷ் குமார் கூறுகையில்: "ஐசிஐசிஐ லைஃப் BSE 500 Momentum குவாலிட்டி 50 இன்டெக்ஸ் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு உயர்தரமான தொழில்கள், வலுவான வருவாய் வாய்ப்புகள் மற்றும் நிலையான பங்கு விலை வளர்ச்சி கொண்ட நிறுவனங்களைக் கண்காணித்து, அதன் மூலம் நீண்டகாலச் செல்வத்தை உருவாக்குவதற்கான ஒரு சிறந்த வழியை வழங்குகிறது. முக்கியமாக, பங்கின் மீதான லாபம் (Return on Equity), கடன் மற்றும் சமபங்கு விகிதம் (Debt to Equity) மற்றும் ஒரு பங்கின் வருவாய் (Earnings per Share) போன்ற நிதி அளவீடுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் வலுவான நிதி நிலைமை கொண்ட மற்றும் கடந்த 12 மாதங்களில் நல்ல பங்கு விலை வளர்ச்சியைக் கண்டுள்ள நிறுவனங்களின் போர்ட்ஃபோலியோவில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
சந்தை மாற்றங்களைச் சரியாகக் கையாண்டு, நீண்டகால முதலீட்டின் கூட்டு வட்டி பலனை (Compounding Power) வாடிக்கையாளர்கள் பெறுவதை உறுதி செய்யும் எங்கள் நிறுவனத்தின் நோக்கத்திற்கு ஏற்பவே இந்த இண்டெக்ஸ் ஃபண்ட் அமைந்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் குடும்பங்களுக்கு நிலையான வளர்ச்சியை நீடித்த நிதிப் பாதுகாப்பாக மாற்றும் ஒரு கட்டமைக்கப்பட்ட வழியை இது வழங்குகிறது."
செப்டம்பர் 30, 2026 நிலவரப்படி, BSE 500 Momentum குவாலிட்டி 50 இன்டெக்ஸ் ஃபண்ட் ஆனது 7 ஆண்டுகளில் 23.7% வரையிலான வருவாயை (Returns) ஈட்டித் தந்துள்ளது. இதன்படி, 7 ஆண்டுகளுக்கு முன்பு முதலீடு செய்யப்பட்ட ₹1 லட்சம், இன்று ₹4.4 லட்சமாக உயர்ந்திருக்கும். மேலும், வணிகத்தின் அடிப்படை அம்சங்கள் மற்றும் சந்த வாய்ப்புகளின் மாற்றங்களுக்கு ஏற்ப, இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோ காலாண்டுக்கு ஒருமுறை சீரமைக்கப்பட்டு (rebalanced) புதுப்பிக்கப்படுகிறது.
குறிப்பாக, 2027 நிதியாண்டின் முதல் பாதியில் (H1-FY2027) நிறுவனத்தின் கிளைம் தீர்வு விகிதம் (Claim Settlement Ratio) 99.3% ஆக உள்ளதுடன், விசாரணை தேவையில்லாத கிளைம்களுக்கு சராசரியாக 1.1 நாட்களில் தீர்வு வழங்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் மிகவும் தேவையான நேரத்தில் உறுதுணையாக இருக்கும் நிறுவனத்தின் கடப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.
ஐசிஐசிஐ லைஃப் BSE 500 Momentum குவாலிட்டி 50 இன்டெக்ஸ் ஃபண்ட் ஆனது, நிறுவனத்தின் ஐசிஐசிஐ லைஃப் Protect N Gain, ஐசிஐசிஐ லைஃப் சிக்னேச்சர் Assure, ஐசிஐசிஐ லைஃப் சிக்னேச்சர், ஐசிஐசிஐ லைஃப் பிளாட்டினம், ஐசிஐசிஐ லைஃப் வெல்த் எலைட் ப்ரொ போன்ற பெரும்பாலான ULIP திட்டங்களானது ஆயுள் காப்பீட்டுப் பலன்களுடன் www.icicilife.com இணையதளத்தில் கிடைக்கும்.
