hello madras mobile banner 1200x300

சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் 30 கிலோ கஞ்சா வைத்திருந்த வழக்கில் முக்கிய தலைமறைவு எதிரி திரிபுரா மாநிலத்தில் கைது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.A.அமல்ராஜ், இ.கா.ப.,
அவர்களின் உத்தரவின்பேரில் சென்னை பெருநகரில் போதைப் பொருட்களுக்கு
எதிரான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு 12 காவல் மாவட்டங்களில் காவல்
துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் மற்றும்
ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படையினர் தொடர்ந்து கண்காணித்து, போதைப்
பொருட்களை வைத்திருப்பவர்கள், கடத்தி வருபவர்கள், பதுக்கி வைத்து விற்பனை
செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, 11.06.2026 அன்று இரவு F-1 சிந்தாதிரிப்பேட்டை
காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர்,
சிந்தாதிரிப்பேட்டை, மே தின பூங்கா அருகே கண்காணித்து, அங்கு சட்டவிரோத
விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த எதிரி ஆகாஷ் தாஸ், வ/23, ராம்தாகூர் பள்ளி,
அகர்தலா, மேற்கு திரிபுரா மாநிலம் என்பவரை கைது செய்து, 30 கிலோ கஞ்சா
மற்றும் செல்போன் பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற
காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய தலைமறைவு எதிரி
திரிபுராவில் பதுங்கியிருப்பதன்பேரில், F-1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய
காவல் குழுவினர் காவல் உயரதிகாரிகள் உத்தரவுப்பெற்று திரிபுரா மாநிலம் சென்று
முகாமிட்டு, அம்மாநில போலீசார் உதவியுடன் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில்
ஈடுபட்டு, இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய தலைமறைவு எதிரி சாகர்சில், வ/26.
பிஷால்கார், மேற்கு திரிபுரா என்பவரை 28.08.2026 அன்று கைது செய்து, திரிபுரா
மாநிலம், பிஷால்கார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உரிய சட்ட நடவடிக்கைகளுடன்
எதிரி சாகர்சில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
விசாரணையில் எதிரி சாகர்சில் திரிபுரா மாநிலத்திலிருந்து கஞ்சாவை ஆட்கள்
மூலம் சென்னைக்கு அனுப்பி சட்டவிரோத விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட எதிரி சாகர்சில் விசாரணைக்குப் பின்னர் இன்று
(01,06,2026) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில்
அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »