hello madras mobile banner 1200x300

மதுரவாயல் பகுதியில் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி,இன்ஸ்டாகிராமில் இருவரது புகைப்படங்களை பதிவிட்ட நபர் கைது. செல்போன் பறிமுதல்.

சென்னை, மதுரவாயல், லட்சுமி நகரைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர், சுமார் 5
ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமனகாந்தன் என்பவரை காதலித்து வந்ததாகவும், கடந்த 2
வருடங்களுக்கு முன்பு இருவரது வீட்டிலும் இவர்களது திருமண பேச்சுவார்த்தை
நடைபெற்றபோது, பிரச்சனை ஏற்பட்டு திருமண பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால்,
அப்பெண் லட்சுமனகாந்தனிடம் பேசாமல் தவிர்த்து செல்போன் எண்ணை
மாற்றியிருந்ததாகவும், ஆனால் லட்சுமனகாந்தன் மேற்படி பெண்ணிடம் திருமணம் செய்து
கொள்ள வற்புறுத்தி வந்த நிலையில், லட்சுமனகாந்தன் இன்ஸ்டாகிராமில் மேற்படி
பெண்ணின் பெயரில் ஒரு போலி கணக்கை உருவாக்கி அதில் இருவரும் ஒன்றாக பழகிய
புகைப்படங்களை பதிவிட்டு, தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு
அனுப்பியதாகவும், இதனால் தனக்கு வேறு எந்த வரன்களும் வராமல் திருமணம்
தடைபட்டு வருவதாகவும், மேற்படி லட்சுமனகாந்தன் மீது நடவடிக்கை எடுத்து தனது
பெயரில் உள்ள போலி இன்ஸ்டாகிராம் கணக்கை அழித்து, அவர் வைத்துள்ள
புகைப்படங்களை அழிக்குமாறு பாதிக்கப்பட்ட பெண் T-4 மதுரவாயல் காவல்
நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act),
தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) மற்றும் தகவல்
தொழில்நுட்ப சட்டம் (IT Act) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார்
விசாரணை மேற்கொண்டனர்.
T-4 மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர்
சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட
லட்சுமனகாந்தன், வ/30, வேடசந்தூர் தாலுக்கா, திண்டுக்கல் மாவட்டம் என்பவரை நேற்று
(29.08.2026) கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் எதிரி லட்சுமனகாந்தன் கணினி பழுது பார்க்கும் வேலை செய்து
வருவது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட எதிரி லட்சுமனகாந்தன் விசாரணைக்குப் பின்னர் நேற்று
(29.08.2026) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »