மு.க.ஸ்டாலின் இன்று (30-08-2026) சென்னை, ஐ.டி.சி. கிராண்ட் சோழாவில் நடைபெற்ற தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே. சுதீஷ் மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்துகொண்டு டாக்டர் ஜானுஸ்ரீ சுதீஷ் மற்றும் அகில் ரவிகுமார் ஆகியோரை வாழ்த்தினார்.
அப்போது, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.
