2016ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் வியாபாரம்
விஷயமாக மலேசியா சென்றிருந்தபோது, அங்கு வசித்து வரும் மகேஸ்வரன், வ/45
என்பவர் அறிமுகமாகி பழகி பின்னர் மேற்படி பெண்ணை திருமணம் செய்து
கொள்வதாகவும், திருமணத்திற்கு பின்னர் மலேசியா அழைத்து செல்வதாகவும்,
அதற்காக நான் சென்னை வரும்போது, வருமாறு கூறியதன்பேரில், சென்னைக்கு வந்த
மகேஸ்வரன் மேற்படி பெண்ணை தேனாம்பேட்டை பகுதியிலுள்ள ஒரு ஓட்டலுக்கு
அழைத்துச் சென்று உறவு வைத்துக் கொண்டு பின்னர் மலேசியா சென்று திருமணம்
செய்து கொள்ள மறுத்ததாகவும், மேற்படி பாதிக்கப்பட்ட பெண் W-24 தேனாம்பேட்டை
அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது வழக்குப் பதிவு செய்து,
விசாரணை மேற்கொண்டு, இவ்வழக்கில் தொடர்புடைய மகேஸ்வரன், வ/45 (2016ம்
ஆண்டு) என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலுக்கு
உட்படுத்தப்பட்டார்.
W-24 தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்
தலைமையிலான காவல் குழுவினரால், இவ்வழக்கு முறையாக விசாரிக்கப்பட்டு, இறுதி
அறிக்கை தாக்கல் செய்து, அல்லிக்குளம் வளாகத்திலுள்ள மகளிர் நீதிமன்றத்தில்
வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்ற விசாரணை முடிவடைந்து
28.082026 அன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வழக்கில், கைது செய்யப்பட்ட எதிரி மகேஸ்வரன் மீது குற்றம்
நிரூபிக்கப்பட்டதால், எதிரி மகேஸ்வரன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, மொத்தம்
10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.50,000/- அபராதமும், அபராதம்
செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்
எனவும் கனம் நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.
மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு
சிறப்பு கவனம் செலுத்தி சாட்சிகளை ஆஜர்படுத்தி, தொடர்ச்சியான
நடவடிக்கைகளினால் நீதிமன்றத்தில் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த W-
24 தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும்
நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை உயரதிகாரிகள் பாராட்டினர்.
