hello madras mobile banner 1200x300

தமிழ்நாடு அஞ்சல் வட்ட அளவிலான பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் டிசம்பர் 4 அன்று நடைபெறுகிறது

சென்னை – 14 நவம்பர், 2026 'அஞ்சல் சேவை மக்கள் சேவை' முன்முயற்சியின் ஒரு பகுதியாக, அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்ட முதன்மை அஞ்சல் துறை சார்பில் 2026 டிசம்பர் மாதத்திற்கான வட்ட அளவிலான பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் 2026 டிசம்பர் 4 அன்று நடைபெற உள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெற உள்ளது.

அஞ்சல் துறையின் திட்டங்கள், சேவைகள் தொடர்பான வாடிக்கையாளர்களின் குறைகளை முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் நேரில் கேட்டறிய உள்ளார். வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களை 2026 நவம்பர் 23 அன்று அல்லது அதற்கு முன்னதாகச் சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே கீழ்நிலை கோட்ட அல்லது மண்டல அலுவலகங்களில் முறையிடப்பட்டு, மனுதாரருக்குத் திருப்தியளிக்கும் வகையில் தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ள புகார்கள் மட்டுமே வட்ட அளவில் பரிசீலிக்கப்படும்; இந்த வட்ட அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாமில் புதிய புகார்கள் நேரடியாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

புகார்தாரர்கள் தங்களது குறைகளை ஈ. சுந்தரேஸ்வரி, உதவி இயக்குநர் (வாடிக்கையாளர் சேவை, ஆய்வு, தபால்தலை சேகரிப்பு), முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை 600 002 என்ற முகவரிக்கு 2026 நவம்பர் 23 அல்லது அதற்கு முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும். கடித உறையின் மேல் 'வட்ட அஞ்சல் குறைதீர்ப்பு முகாம்' எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். மேலும் pg.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும் புகார்களை அனுப்பலாம்.

Read the full e-paper

Translate »