hello madras mobile banner 1200x300

முதலீட்டு அறிவிப்புகளை விரைந்து செயல்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கைகள் தேவை: குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

சென்னை – 14 நவம்பர், 2026 ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 31-வது இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (சிஐஐ) உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (13.11.2026) உரையாற்றினார்.

அப்போது, முதலீட்டு அறிவிப்புகளை விரைந்து நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்திய அவர், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆந்திரப் பிரதேசம் அடைந்து வரும் வளர்ச்சியைப் பாராட்டினார்.

2024 ஜூன் முதல் இதுவரை ரூ.22 லட்சம் கோடிக்கும் அதிக மதிப்பிலான 714 முதலீடுகளை ஆந்திரப் பிரதேசம் ஈர்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். பசுமை எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, குறைக்கடத்திகள், குவாண்டம் தொழில்நுட்பம், துறைமுகங்கள், விண்வெளி, நவீன உற்பத்தி ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் மாநிலத்தைத் தொழில், புத்தாக்க மையமாக உருவாக்கி வருவதாக அவர் தெரிவித்தார்.

2047-க்குள் பொன்னான ஆந்திரா (ஸ்வர்ண ஆந்திரா) என்ற மாநிலத்தின் இலக்கு, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற பிரதமர் நரேந்திர மோடியின் இலக்குக்கு ஏற்ப அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க அரசு மட்டுமின்றி தொழில்துறையினர், கல்வியாளர்கள், தொழில்முனைவோர், இளைஞர்கள் என அனைவரின் பங்களிப்பும் அவசியம் என்று அவர் கூறினார்.

வெறும் கலந்துரையாடல்களுடன் நின்றுவிடாமல், செயல்பாடுகள் மூலம் சாதனைகளையும், ஒத்துழைப்பு மூலம் வளத்தையும் உருவாக்க வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் திருச்சி சி.பி. ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

இதில் ஆந்திர ஆளுநர் எஸ். அப்துல் நசீர், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர்கள் பிரல்ஹாத் ஜோஷி, ராம் மோகன் நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read the full e-paper

Translate »