hello madras mobile banner 1200x300

விவசாயிகளின் பாரம்பரிய அறிவை அறிவியல் ஆராய்ச்சி, சந்தை வாய்ப்புகளுடன் இணைக்க வேண்டும்- பிரதமரின் முதன்மை செயலாளர் வேண்டுகோள்

சென்னை – 13 நவம்பர், 2026 விவசாயிகளின் பாரம்பரிய அறிவை அறிவியல் ஆராய்ச்சி, சந்தை வாய்ப்புகளுடன் இணைக்க வேண்டும்- பிரதமரின் முதன்மை செயலாளர் வேண்டுகோள்.

இந்தியாவின் வேளாண் பல்லுயிர் பெருக்கத்தின் பாதுகாவலர்களாகவும், புதுமைக் கண்டுபிடிப்பாளர்களாகவும், விவசாயிகளை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர்களின் பாரம்பரிய அறிவை அறிவியல் ஆராய்ச்சி, விதை அமைப்புகள், சந்தை வாய்ப்புகளுடன் இணைக்க வேண்டும் என்று பிரதமரின் முதன்மை செயலாளர் டாக்டர் பி கே மிஸ்ரா அழைப்பு விடுத்துள்ளார். தாவர ரகங்கள், விவசாயிகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் 22-வது நிறுவன நாள் மற்றும் தாவர மரபணு மீட்பவருக்கான விருது வழங்கும் விழாவில் உரையாற்றிய டாக்டர் மிஸ்ரா, இந்நிகழ்வு 2001-ம் ஆண்டின் தாவர ரகங்கள், விவசாயிகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் 25-ம் ஆண்டு நிறைவைக் குறிப்பதாக தெரிவித்தார்.

பாரம்பரிய அறிவு, உணவு பண்பாடுகள், சமூக வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் அதே சூழலில் பருவநிலை மாற்றம், நீர் பற்றாக்குறை, பூச்சிகள், நோய்களை எதிர்கொள்ளக்கூடிய பெயர்களை உருவாக்குவதற்கு இந்தியாவின் வளமான வேளாண் பல்லுயிர் பெருக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறினார். இந்தியாவின் 22 வேளாண் பல்லுயிர் பெருக்க மையங்களை அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன் 2012-ம் ஆண்டின் உணவு வேளாண் அமைப்பால் உலகளவில் முக்கிய வேளாண் பாரம்பரிய அமைப்பாக அங்கீகரிக்கப்பட்ட ஒடிசாவின் கோராபுட்டை சமூகம் சார்ந்த தலைமையிலான பாதுகாப்பிற்கு உதாரணமாக சுட்டிக்காட்டினார்.

Read the full e-paper

Translate »