hello madras mobile banner 1200x300

அதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம்! அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்! – இபிஎஸ் விமர்சனம்

சென்னை – 11 நவம்பர், 2026 வட மாநிலங்களைப்போல தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரம் பரவி வருவது தமிழக மக்களை அச்சத்தின் பிடியில் தள்ளியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி ஞானவேல் என்பவர் நாட்டுத் துப்பாக்கியால் கொடூரமாக சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீரழிந்து, சாமானிய மக்களுக்கு பாதுகாப்பில்லாத ஒரு சூழல் நிலவி வரும்நிலையில், தற்போது வட மாநிலங்களை போல துப்பாக்கி கலாசாரமும் பரவி வருவது தமிழக மக்களை அச்சத்தின் பிடியில் தள்ளியுள்ளது.

குற்றங்கள் நடக்கும் போதெல்லாம், "உயர்மட்ட ஆலோசனை நடத்துகிறோம்", "கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளோம்" என்று வெறும் பெயரளவு செய்திகளை மட்டும் ஊடகங்களில் பரப்புவதால் யாருக்கு என்ன லாபம்?

வெறும் விளம்பர அறிக்கைகளாலும், கேமராக்களுக்கு முன்னால் நடத்தும் போலி ஆய்வுகளாலும் ஒரு மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கை ஒருபோதும் சரிசெய்து விட முடியாது.இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளதாவது:

காவல்துறையை தன் கையில் வைத்துள்ள பொய்க்கால் குதிரை அரசின் முதலமைச்சர் நிர்வாகத் திறமையின்றி தூங்கிக் கொண்டிருக்கிறாரா?

எனவே, இனிமேலும் விளம்பர பாணியில் வெற்று நாடகங்களை நடத்தாமல், தமிழ்நாட்டில் சீரழிந்து கிடக்கும் சட்டம் – ஒழுங்கை உடனடியாக சரிசெய்யவும், துப்பாக்கி கலாசாரத்தை ஆரம்ப நிலையிலேயே இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும் தேவையான தக்க நடவடிக்கைகளை பொய்க்கால் குதிரை தவெக அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

Read the full e-paper

Translate »