சென்னை – 11 நவம்பர், 2026 ராகுல் காந்திக்கு முன்பே ஒரு குழந்தை பிறந்து இறந்துவிட்டதாகவும், அந்தக் குழந்தையை ஆற்றில் வீசச் சொன்னபோது தான் மறுத்துவிட்டதாகவும் சோனியா காந்தி தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
'பிலாங்கிங்: ஏ ஜா்னி ஆஃப் லவ்' என்ற புத்தகத்தில் சோனியா எழுதியிருக்கும் பல முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி வருகிறது.
அதில்தான் இதுவரை அவர் பகிர்ந்திராக ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். 1968ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காந்தியின் வீடு முழுக்க மகிழ்ச்சியால் திளைத்திருந்தது. காரணம், சோனியா தான் கருவுற்றிருப்பதை அறிவித்தபோது, ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சி அடைந்தது. எப்போதும் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருக்கும் இந்திராவே, சோனியாவை கட்டியணைத்து ஒரு பெரிய குழந்தைக்கு சிறிய குழந்தை பிறக்கப்போகிறது என்று கூறி மகிழ்ந்தார்.
ஆனால், இந்த மகிழ்ச்சி வெகுநாள்கள் நீடிக்கவில்லை. 1969ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி சோனியாவுக்கு குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. ஒட்டுமொத்த குடும்பமும் கலங்கிப்போனது.
புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதாவது, குழந்தையின் அழுகுரலைக் கேட்டேன். இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த குழந்தையை நானும் ராஜீவ்வும் சென்று பார்த்தோம், அப்போதே, குழந்தை உயிர்பிழைக்கும் வாய்ப்பு குறைவு என்று மருத்துவர்கள் கூறினர், அதுபோலவே, காலை 6 மணிக்கெல்லாம் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறினார்கள்.
உடைந்துவிட்டோம், கதறி அழுதோம். ஹிந்து முறைப்படி பிறந்த குழந்தைக்கு இறுதிச் சடங்குகள் செய்யக்கூடாது, ஆற்றில் விடவேண்டும் என்று சொன்னார்கள். ஆனால், ஆற்றில் வீச நான் மறுத்துவிட்டேன்.. மெஹரௌலியில் ஃபேரோஸ்காந்தியின் பண்ணை வீட்டில் குழந்தை புதைக்கப்பட்டது என்று புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சோனியா காந்தி, ‘பிலாங்கிங்: ஏ ஜா்னி ஆஃப் லவ்’ என்ற புத்தகத்தில் தன்னுடைய வாழ்வின் பல முக்கிய தருணங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில்தான் இந்த தகவலும் வெளியாகியிருக்கிறது.
