hello madras mobile banner 1200x300

மாம்பலம் பகுதியில் வீட்டில் வைத்திருந்த லேப்டாப் மற்றும் செல்போனை திருடிச் சென்ற வழக்கில் ஒருவர் கைது

சென்னை – 10 நவம்பர், 2026 திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்ஶ்ரீ, பெ/வ.21 என்பவர் 05.11.2026 அன்று சென்னை, தி.நகர், ராமேஸ்வரம் தெருவிலுள்ள அவரது அத்தை வீட்டிற்கு வந்து தங்கியிருந்ததாகவும், கடந்த 07.11.2026 அன்று இரவு அத்தை மகளை அழைத்து வர விமான நிலையம் சென்று, அத்தை மகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்ததாகவும், பின்னர் நேற்று (08.11.2026) விடியற்காலை, வீட்டின் மாடியிலுள்ள அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கு வைத்திருந்த இவரது லேப்டாப் மற்றும் செல்போனை யாரோ திருடிச் சென்றது தெரியவந்ததாகவும், உடனே மொட்டை மாடிக்கு சென்று பார்த்தபோது, ஒரு பெண் உட்பட 3 நபர்கள் மேற்படி லேப்டாப் மற்றும் செல்போனை திருடிக் கொண்டு தப்பியோடியதாகவும், மேற்படி 3 நபர்களை கண்டுபிடித்து தனது லேப்டாப் மற்றும் செல்போனை மீட்டு தரும்படியும் ராஜ்ஶ்ரீ என்பவர் R-1 மாம்பலம் காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

R-1 மாம்பலம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து, மேற்படி திருட்டில் ஈடுபட்ட எதிரி ஜெயமுரளளி, வ/36, கிண்டி ரேஸ் கோர்ஸ், சென்னை என்பவரை நேற்று (08.11.2026) கைது செய்தனர்.

விசாரணையில் எதிரி ஜெயமுரளி துப்புரவு பணி செய்து வருவதும், இவர் அவரது நண்பர் மற்றும் தோழியுடன் சேர்ந்து மேற்படி திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட எதிரி ஜெயமுரளி விசாரணைக்குப் பின்னர் நேற்று (08.11.2026) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவு எதிரிகளை காவல் குழுவினர் தேடி வருகின்றனர்.

Read the full e-paper

Translate »