hello madras mobile banner 1200x300

கொடுங்கையூர் பகுதியில் வீட்டில் தங்க நகைகளை திருடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது.

சென்னை – 7 நவம்பர், 2026 சென்னை, கொடுங்கையூர், ஆர்.வி நகர், 7 வது தெருவில் சுந்தரி, பெ/வ/46, க/பெ.சக்திவேல் (லேட்) என்பவர் வசித்து வருகிறார். சுந்தரியின் அக்கா ஶ்ரீதேவி என்பவர் கடந்த 2025ம் ஆண்டு இறந்து விட்டதால், ஶ்ரீதேவியின் மகள் பெமினா என்பவர் மேற்படி சித்தி சுந்தரி வீட்டில் தங்கியிருந்து வருவதாகவும், கடந்த 20.06.2026 அன்று சுந்தரி சுமார் 19 சவரன் தங்க நகைகளை பீரோவில் வைத்து விட்டு வெளியே சென்று, சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மேற்படி தங்க நகைகளை காணவில்லை எனவும், மேற்படி தங்க நகைகளை தனது வீட்டில் தங்கியிருந்து வரும் அக்கா மகள் பெமினா என்பவர் திருடியிருக்கலாம் எனவும் அவர் மீது சந்தேகம் இருப்பதாகவும், தகுந்த நடவடிக்கை எடுத்து தங்க நகைகளை மீட்டு தருமாறு சுந்தரி என்பவர் P-6 கொடுங்கையூர் காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, மேற்படி வழக்கில் தொடர்புடைய எதிரி பெமினாவின் தோழி ஸ்ருதிகா, வ/23, பெரம்பூர், சென்னை என்பவரை கடந்த 26.10.2026 அன்று கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இவ்வழக்கில் மொத்தம் 5 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டு, தலைமறைவான குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

. P-6 கொடுங்கையூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டை நடத்தி மேற்படி வழக்கில் ஸ்ருதிகாவிற்கு தங்க நகைகளை அடகு வைத்து உதவிய ராகுல், வ/23, ஓட்டேரி, சென்னை என்பவரை 04.11.2026 அன்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட எதிரி ராகுல் விசாரணைக்குப்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Read the full e-paper

Translate »