hello madras mobile banner 1200x300

தூய்மைக்கான, சிறப்பு இயக்கம் 6-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்த அறிவியல், தொழில்நுட்பத் துறை

சென்னை – 6 நவம்பர், 2026 அறிவியல், தொழில்நுட்பத் துறை, தனது துறை, அதன் தன்னாட்சி நிறுவனங்கள், கீழ்நிலை அலுவலகங்கள் ஆகியவற்றில் தூய்மை இயக்கத்தை வெற்றிகரமாக மேற்கொண்டது. தூய்மையை நிறுவனமயமாக்குதல், நிலுவையில் உள்ள பணிகளைக் குறைத்தல், ஆவண மேலாண்மையை வலுப்படுத்துதல், அலுவலக இடங்களை உகந்த முறையில் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கான தனது உறுதிப்பாட்டுக்கு ஏற்ப, 2026 அக்டோபர் 2 முதல் 31 வரை இந்த சிறப்புத் தூய்மை இயக்கம் நடத்தப்பட்டது. இந்த இயக்கம், நிர்வாக சீர்திருத்தங்கள் துறையின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க செயல்படுத்தப்பட்டது.

சிறப்பு இயக்கம் 6- ன் முக்கிய சாதனைகள்:

* இந்த இயக்கத்தின் போது, ​​இத்துறை சார்பில் 906 பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.

* இந்த இயக்கத்தின் மூலம் தேவையற்ற பொருட்களை முறையாக அப்புறப்படுத்தியதன் மூலம் ₹25.96 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டதுடன், 1,72,798 சதுர அடி அலுவலக இடமும் விடுவிக்கப்பட்டது.

ஆவண மேலாண்மை, பொதுமக்களின் குறை தீர்ப்பு, திறம்பட்ட மக்கள் தொடர்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம், இத்துறை நிர்வாகத் திறனை மேலும் மேம்படுத்தியதோடு, மக்களை மையமாகக் கொண்ட சேவை என்ற சூழலை வலுப்படுத்தியுள்ளது.

Read the full e-paper

Translate »