hello madras mobile banner 1200x300

பண்டிகை காலத்தை முன்னிட்டு மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.1.09 லட்சம் கோடி வரிப்பகிர்வுத் தொகை

சென்னை – 6 நவம்பர், 2026 பண்டிகை காலத்தை முன்னிட்டு மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.1.09 லட்சம் கோடி வரிப்பகிர்வுத் தொகை முன்கூட்டியே விடுவிப்பு: தமிழ்நாட்டுக்கு ரூ.4,466 கோடி விடுவிப்பு.

பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டும், மாநில அரசுகள் வளர்ச்சித் திட்டங்களுக்கும் நலத்திட்டப் பணிகளுக்குமான செலவுகளை விரைவுபடுத்தவும், மத்திய அரசு மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு நிதியை முன்கூட்டியே விடுவித்துள்ளது.

இதன்படி, நாடு முழுவதும் மாநில அரசுகளுக்கு ரூ. 1,09,019 கோடியை மத்திய அரசு இன்று ( 2026 நவம்பர் 5) விடுவித்துள்ளது.

வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 10- ம் தேதி விடுவிக்கப்படும் வரிப்பகிர்வு நிதி, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இந்த மாதம் 5 நாட்களுக்கு முன்பாகவே விடுவிக்கப்பட்டுள்ளது.

மாநில வாரியாக விடுவிக்கப்பட்ட நிதியில், தமிழ்நாட்டிற்கு ரூ. 4,466 கோடி ஒதுக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளது.

மாநில வாரியாக விடுவிக்கப்பட்டுள்ள நிதி விவரம் (ரூ. கோடியில்):

* ஆந்திரப் பிரதேசம் – 4,597

* அருணாசலப் பிரதேசம் – 1,476

* அசாம் – 3,552

* பீகார் – 10,845

* சத்தீஸ்கர் – 3,602

* கோவா – 398

* குஜராத் – 4,094

* ஹரியானா – 1,484

* இமாச்சலப் பிரதேசம் – 996

* ஜார்க்கண்ட் – 3,660

* கர்நாடகா – 4,504

* கேரளா – 2,597

* மத்தியப் பிரதேசம் – 8,010

* மகாராஷ்டிரா – 7,022

* மணிப்பூர் – 682

* மேகாலயா – 688

* மிசோரம் – 615

Read the full e-paper

Translate »