சென்னை – 5 நவம்பர், 2026 பொதுமக்களின் வீடு தேடிச் சென்று சிறப்புக் மருத்துவ சேவைகளை வழங்கும் நடமாடும் எலும்பியல் மற்றும் முதுகுத் தண்டுவட பராமரிப்புப் பிரிவை (Mobile Orthopaedic and Spine Care Unit) வடபழனி காவேரி மருத்துவமனை (Kauvery Hospital Vadapalani) பெருமையுடன் தொடங்கியுள்ளது. ஹெக்சாவேர் டெக்னாலஜிஸ் (Hexaware Technologies) நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் கீழ் இந்தச் சிறப்பான மக்கள் நல முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் மருத்துவப் பிரிவில் டிஜிட்டல் எக்ஸ்-ரே (digital X-ray), எலும்பு தாது அடர்த்தி (BMD) பரிசோதனைகள் மற்றும் எலும்பு, மூட்டு மற்றும் முதுகுத் தண்டுவடக் கோளாறுகளை முன்கூட்டிய கண்டறியும் ஆரம்பக்கட்ட பரிசோதனைகள் (early screening) மேற்கொள்ளப்படுகின்றன. முதியோர்கள் (senior citizens) மற்றும் மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள கிராமப்புற சமூகங்களைச் சேர்ந்த மக்கள் (rural communities) எளிய முறையில் உயர்தர மருத்துவப் பரிசோதனைகளைப் பெறும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
காவேரி மருத்துவமனையின் இந்த நடமாடும் க்ளினிக்கில் ஆன்-போர்டு ரீடருடன் கூடிய டிஜிட்டல் எக்ஸ்-ரே மற்றும் எலும்பு தாது அடர்த்தி (Bone Mineral Density (BMD)) பரிசோதனைக் கருவிகள் முழுமையாகப் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய மருத்துவப் பரிசோதனைகளைத் தங்களுடைய இருப்பிடத்திற்கு அருகிலேயே மிக எளிதாகப் பெற்றுக் கொள்ள முடியும். இதனால், முதியோர்கள், இயல்பாக நடமாட முடியாதவர்கள் (mobility limitations) மற்றும் தொலைதூரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று நீண்ட வரிசையில் நின்று பரிசோதனை செய்வதில் சவால்களைச் சந்திக்கும் மக்களுக்கு இந்தத் திட்டம் ஒரு மாபெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.
ஆர்த்ரிடிஸ் (வாத நோய்), ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்பு மெலிவு நோய்), எலும்பு முறிவுகள் மற்றும் முதுகுத் தண்டுவடக் கோளாறுகள் போன்ற பல்வேறு உடல்நலப்
பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய நேரத்தில் சிகிச்சை பெற இந்த நடமாடும் க்ளினிக் பெரிதும் உதவும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் எடுக்கப்படும் அதிநவீன டிஜிட்டல் எக்ஸ்-ரே வசதி மூலம், மருத்துவர்கள் எலும்பு மற்றும் மூட்டுப் பிரச்சினைகள், எலும்பு முறிவுகள் மற்றும் முதுகுத் தண்டுவடக் குறைபாடுகளை மிகத் துல்லியமாக ஆய்வு செய்து மதிப்பீடு செய்ய முடியும். அதேபோல், BMD (எலும்பு தாது அடர்த்தி) மதிப்பீடுகள் மூலம், எலும்பு அடர்த்தி குறைபாடு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் ஆபத்து இருக்கிறதா என்பதையும் நாம் முன்கூட்டியே கண்டறிய முடியும். இதனால், சரியான நேரத்தில் தேவையான பாதுகாப்பான ஆலோசனைகளையும் சிகிச்சையையும் பெற இந்த நடமாடும் க்ளினிக் உதவுகிறது.
காவேரி மருத்துவமனையின் நடமாடும் எலும்பியல் மற்றும் முதுகுத் தண்டுவட பராமரிப்புப் பிரிவு குறித்து காவேரி மருத்துவமனை குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் (Dr. Aravindan Selvaraj, Co-founder and Executive Director, Kauvery Group of Hospitals) கூறுகையில், எலும்பு, மூட்டு மற்றும் முதுகுத் தண்டுவடக் கோளாறுகள் நம்முடைய அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகளையும், பழக்கவழக்கங்களையும், வாழ்க்கைத் தரத்தையும் கடுமையாகப் பாதிக்கக்கூடும். குறிப்பாக முதியோர்கள் இதனால் அதிகம் சிரமப்படுகிறார்கள். மறுபக்கம், கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் எளிய மக்களுக்கு இது போன்ற சிறப்புக் மருத்துவச் சேவைகளைப் பெறுவது இன்றும் ஒரு சவாலாகவே நீடித்து வருகிறது. தரமான மருத்துவச் சிகிச்சை கிடைப்பதில் இருக்கும் இந்த இந்தத் தடையை உடைக்கும் வகையில், அத்தியாவசிய பரிசோதனை மற்றும் மதிப்பீட்டு வசதிகளைப் பொதுமக்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே கொண்டு சென்று, உரிய நேரத்தில் துல்லியமான மருத்துவ உதவியைப் பெற்றுத் தருவதே எங்கள் லட்சியமாகும். ஹெக்சாவேர் டெக்னாலஜிஸ் (Hexaware Technologies) நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்டிருக்கும் இந்த மக்கள் நல முயற்சி, நாங்கள் சேவை செய்யும் சமூகங்களுக்கு உயர்தர மருத்துவச் சேவைகளை மேலும் எளிதாகக் கொண்டு சேர்க்க வேண்டுமென்ற எங்களது அர்ப்பணிப்பின் ஒரு வெளிப்பாடுதான்’’ என்றார்
ஹெக்சாவேர் நிறுவனத்தின் நிதிப்பிரிவு துணைத் தலைவர் டாக்டர் ரம்யா கண்ணன் (Dr. Ramya Kannan, Vice President – Finance, Hexaware Technologies) கூறுகையில், “அர்த்தமுள்ள சமூக நலத் திட்டங்கள் மக்களின் அன்றாட வாழ்வில் தெளிவான மற்றும் நேர்மையான மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்பதில் ஹெக்சாவேர் நிறுவனம் எப்போதும் உறுதியான நம்பிக்கை வைத்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, முதியோர் மற்றும் கிராமப்புற, தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் எளிய மக்களின் இருப்பிடத்திற்கே எலும்பியல் மற்றும் முதுகுத் தண்டுவடச் சிறப்புச் சிகிச்சைகளைக் கொண்டு சேர்க்கக் காவேரி மருத்துவமனையுடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். உயர்தரச் சிறப்புக் மருத்துவச் சேவைகளைப் பெறும் வாய்ப்புகளை எளிதாக்குவதோடு, எலும்பு ஆரோக்கியம், உடல் இயக்கம் (mobility) மற்றும் ஆரோக்கியமான முதுமை (healthy ageing) குறித்த விழிப்புணர்வை மக்களிடையே இந்தத் திட்டம் உருவாக்கும் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம்” என்றார்.
இந்தச் கூட்டு முயற்சியின் மூலம், வடபழனி காவேரி மருத்துவமனை மற்றும் ஹெக்சாவேர் டெக்னாலஜிஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து, பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய மருத்துவப் பரிசோதனை சேவைகளை மிகவும் எளிதாகப் பெறுவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளன. எலும்பு, மூட்டு மற்றும் முதுகுத் தண்டுவடக் கோளாறுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அதற்கேற்ப தகுந்த சிகிச்சைகளைப் பெற இந்தத் திட்டம் பெரிதும் ஊக்குவிக்கிறது. இதன் மூலமாக, அதிக எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் உடல் இயக்கத் திறனையும் (mobility) யாருடைய உதவியுமின்றி சுயமாக அன்றாடப் பணிகளை மேற்கொள்ளும் வாழ்க்கையையும் (independence) மேற்கொள்ள இந்த நடமாடும் க்ளினிக் உங்கள் வீட்டிற்கு அருகிலேயே வந்து சேவைகளை அளிக்க வலம் வர இருக்கிறது.
