சென்னை – 5 நவம்பர், 2026 புதிய தொழிலாளர் நலச் சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி: இந்தூரில் மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் ஏற்பாடு.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், மத்தியப் பிரதேச அரசின் தொழிலாளர் துறை ஆகியவை தொழில் அமைப்புகளுடன் இணைந்து தொழிலாளர் நலன், சமூகப் பாதுகாப்பு குறித்த மண்டல அளவிலான திறன் மேம்பா டு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை இந்தூரில் 2026 நவம்பர் 3 அன்று நடத்தின. மத்தியப் பிரதேச தொழிலாளர் ஆணையர் சு ஷ்ரி ஷீதலா பாட்லே தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மத்திய, மாநில தொழிலாளர் நலத் துறைகள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம் ஆகியவற்றின் உயர் அலுவலர்கள், தொழில் துறைப் பிரதிநிதிகள் உட்பட 150- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
