hello madras mobile banner 1200x300

வினாடிக்கு 100 ஜிகாபிட் வேகத்தில் தரவுகளைக் கடத்தும் திறன் கொண்ட புதிய சிலிக்கான்

சென்னை – 5 நவம்பர், 2026 வினாடிக்கு 100 ஜிகாபிட் வேகத்தில் தரவுகளைக் கடத்தும் திறன் கொண்ட புதிய சிலிக்கான் சிப்பை உருவாக்கிய இந்திய ஆராய்ச்சியாளர்கள்.

எதிர்கால 6G கம்பியில்லா தொலைத்தொடர்பு கட்டமைப்புக்கு உதவும் வகையில், வினாடிக்கு 100 ஜிகாபிட் வேகத்தில் தரவுகளைக் கடத்தும் திறன் கொண்ட புதிய சிலிக்கான் சிப் ஒன்றை இந்திய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த முன்னோடி ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

வழக்கமான தகவல் தொடர்பு வழிகளில் உள்ள தடைகள் அல்லது வளைவுகள் சமிக்ஞைகளை பலவீனப்படுத்தும் நிலையில், கிராபீன் போன்ற நுண் கட்டமைப்பைக் கொண்ட சிலிக்கான் படிகத்தை இவர்கள் உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் தடைகளை எளிதாகக் கடந்து டெராஹெர்ட்ஸ் அலைகளை எவ்வித சமிக்ஞை இழப்பும் இன்றி தடையின்றிப் பயணிக்க வைக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிவேகத் தொழில்நுட்பத்தின் மூலம் 5 ஜிபி அளவிலான HD திரைப்படத்தை வெறும் அரை வினாடிக்குள் பரிமாறிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த இழப்புடன் சிப்களிலேயே அலைகளை ஒருங்கிணைக்கும் சிறிய அளவிலான மின்சுற்றுகளை உருவாக்க இந்த கண்டுபிடிப்பு வழிவகுக்கும்.

Read the full e-paper

Translate »